இவ்வளவு நடக்குதே- மத்திய அரசு ஏன் கனத்த மவுனம்? வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தேஜஸ்வி யாதவ் கேள்வி
வட இந்திய தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் ஏன் என்கிறார் தேஜஸ்வி யாதவ்.
பாட்னா: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் வட இந்திய அரசியல் தலைவர்களான பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளர் என்றும் தேசிய அரசியலில் அவர் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தாம் தேசிய அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் பாஜகவை வீழ்த்தும் என ஆணித்தரமாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தொடர்ந்து தேசிய அரசியலில் திமுகவின் வியூகம் தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் திடீரன தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என வதந்தியை பீகார் பாஜகவினர் பரப்பிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பகிரப்பட்டது. இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு குழுவை அனுப்பி வட் இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை பீகார், ஜார்க்கண்ட் மாநில குழுக்கள் உறுதி செய்தன.
மேலும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு எதிரான நிலைமை இருப்பதாக வதந்தி பரப்பியதாக பத்திரிகை நிறுவனங்கள், பாஜக பிரமுகர்கள் மீது முதலில் வழக்குகள் பாய்ந்தன. பின்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வட இந்திய தொழிலாளர் விவகாரம் குறித்து ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், தமிழ்நாடு, பீகார் அரசுகள் இந்த பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு கண்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் எதுவும் பேசாமல் இருக்கிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications