சிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி!
Recommended Video
பாட்னா: மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் சிறையில் வாடி வரும் நிலையில் நடுவானில் நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடியுள்ளார் அவரது மகன் தேஜஸ்வி யாதவ்.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 5 லட்சம் அபராதமும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையிலிருந்து வருகிறார்.

தனியார் விமானம்
அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் சிறையிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் தேஜஸ்வி யாதவோ கடந்த 9-ஆம் தேதி 30ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அதுவும் தனியார் விமானத்தில் நடுவானில் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார்.

நெட்டிசன்கள்
அங்கேயே காலை உணவை நண்பர்களுக்கு வழங்கி மிகவும் ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படங்களை தேஜஸ்வி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கூறுகையில் பீகார் ஏழை மாநிலம் என யார் கூறியது?

ஆடம்பர செலவு
தேஜஸ்வியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடுவானில் தனியார் விமானத்தில் நடந்தது. ஏழைகளுக்காக பாடுபடுபவர் என தன்னை கூறிக் கொள்ளும் தேஜஸ்வி இது போன்று ஆடம்பரமாக செலவு செய்து பிறந்தநாள் கொண்டாடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
இன்னும் சிலரோ தந்தை லாலு சிறையில் வாடி கொண்டிருக்கும் நிலையில் மகன் இதுபோல் செய்வது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர். தேஜஸ்வியின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications