பீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரின் அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இரண்டு வெடிகுண்டுகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) கைப்பற்றி பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் செயலிழக்க வைத்தனர். இது மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக புதன்கிழமை காலை 7 மணிக்கு 16 மாவட்டங்களில் அடங்கியுள்ள, 71 தொகுதிகளில் வாக்களிப்பு தொடங்கியது.
ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 42 பேர், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த 35 பேர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் 29 பேர், காங்கிரசில் இருந்து 21 பேர், இடதுசாரிகளை சேர்ந்தவர்கள் 8 பேர் உட்பட 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications