"ஒரு 4 நாள் காத்திருங்க.. எல்லாமே மாறும்!" கடைசி நேரத்தில் தேஜஸ்விக்கு போன் போட்ட பாஜக.. பரபர தகவல்
பாட்னா: பீகார் அரசியலில் இப்போது மிகப் பெரிய மாற்றம் நடந்துள்ள நிலையில், பாஜக மீது நிதிஷ்குமார் கட்சியினர் பரபர குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.
கடந்த 2020இல் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அங்கு நிதிஷ்குமார் மற்றும் பாஜக இணைந்து கூட்டணி அரசை அமைத்தது.
இருப்பினும், இந்தக் கூட்டணி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் உடன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் ஆட்சியை அமைத்துள்ளார்.

நிதிஷ்குமார்
இதனிடையே நிதிஷ்குமார் தரப்பில் இருந்து பாஜக மீது பரபர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு என்ன காரணம் என்பதை நிதிஷ்குமார் கட்சியின் தலைவர்கள் மக்களிடையே விளக்கி வருகின்றனர். பாஜகவினர் ஜேடியு கட்சியை உடைக்க முயன்றனர் என்பதே நிதிஷ் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. அதேநேரம் நிதிஷ்குமார் துரோகம் செய்தவர் என்றும் இருந்த போதிலும் தாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்ததாகச் சொல்கிறது பாஜக.

4 நாட்கள் வெயிட் பண்ணுங்க
பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியது என்று சாடியுள்ளது நிதிஷ்குமார் தரப்பு. இது குறித்து ஜேடியுவின் ராஜீவ் ரஞ்சன் 'லாலன் கூறுகையில், "நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கக் கூடாது என பாஜக மற்ற கட்சிகளிடமும் அழுத்தம் கொடுத்தது. அவர்கள் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டனர். அவர்களிடம் 3 அல்லது 4 நாட்கள் காத்திருக்கச் சொல்லி உள்ளனர். ஆனால், இனியும் அவர்கள் சொல்வதை யாரும் கேட்கப் போவதில்லை" என்றார்.

அந்த ஒரே ஏஜெண்ட்
மேலும், பாஜகவுக்கு இருந்த ஒரே ஏஜெண்டையும் நிதிஷ்குமார் நீக்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூலை 7ஆம் தேதி வரை மத்திய அமைச்சரவையில் ஜேடியு தரப்பில் இருந்து ஆர்சிபி சிங் இடம் பெற்று இருந்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சூழலில் தான் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலம் முடிந்தது. அவருக்கு நிதிஷ்குமார் மீண்டும் சீட் வழங்கவில்லை. இதனால் ஆர்சிபி சிங் வேறு வழியின்றி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக
இதனிடையே நிதிஷ் குமாருக்கும் தங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பாஜக கூற தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறுகையில், "இரண்டு நாட்களுக்கு முன், அமித்ஷா, நிதிஷ் குமாரை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினார். இந்த முடிவில் 'கவலைப்பட ஒன்றுமில்லை என்று அமித்ஷா கூறினார்" என்று அவர் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு
கூட்டணிக் கட்சிகளை பாஜக மதிப்பதில்லை என்று நிதிஷ்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூட்டம் ஒன்றில் பேசுகையில், "இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் அழிந்துபோகும். பாஜக மட்டுமே இருக்கும்" என்று கூறி இருந்தார். இதைக் குறிப்பிட்டே நிதிஷ்குமார் கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்தது குறித்து விளக்கி வருகிறது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications