நிதீஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் - சுசில் குமார் மோடி
பீகாரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாக்களித்த மக்களுக்கு துணை முதல்வர் சுசில் குமார் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் கூறியுள்ளார்
பாட்னா: பிரதமர் மோடியின் ஆசியோடு நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான கூட்டணி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நிதிஷ்குமார் ஜேடியு கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்திற்கு பதில் தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவரும் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி, இந்த வெற்றி மக்கள் பீகாரின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று கூறினார். இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்களின் கூட்டணிக்கு மக்கள் தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர் என்று கூறிய சுசில்குமார், வெற்றிக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வெற்றியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடிக்கு சமர்பிக்கிறோம் என்று கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது ராகுல் காந்தி குற்றம் சொல்கிறார். மக்கள் வாக்கு ஜேடியு, பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆசியுடன், நிதிஷ்குமார் தலைமையின் கீழ் பீகாரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார் சுசில்குமார் மோடி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications