"சவப்பெட்டியை" எட்டி உதைத்த "சடலம்".. மயானத்தில் அழுகுரல்.. வாயில் களிமண்ணுடன்.. அலறி ஓடிய பெண்கள்
மயானத்தில் திடீரென வந்த அழுகுரலால் மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்
பாட்னா: திடீர்னு கல்லறையில் இருந்து வந்த அழுகுரலை கேட்டு, விறகு சேகரித்து கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. என்ன ஆச்சு?
இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் நமக்குள் ஏற்படுத்திவிடும்.
இப்படித்தான், நம்ம ஈரோட்டிலும் ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.. அவர் பெயர் சத்தியமூர்த்தி கரும்பு வெட்ட கர்நாடகம் போனவர், வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை..

சத்தியமூர்த்தி
பிறகு பஸ்ஸ்டாண்டில் கிடந்த அழுகிய சடலம், சத்தியமூர்த்திதான் என்று நினைத்து, அதை கொண்டு வந்து வீட்டில் வைத்து இறுதி அஞ்சலி செய்து புதைத்துவிட்டு வந்தனர்.. ஆனால், அன்றைக்கு நள்ளிரவே நிஜமான சத்தியமூர்த்தி வீட்டிற்குள் வந்து நின்றதை பார்த்து குடும்பத்தினர் தலைதெறித்து ஓடினார்கள்.. அதுபோலவே, பெரு நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்தது.

சவப்பெட்டி ரோசா
லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.. ரோசாவுக்கு 36 வயது.. இவர் ஒருநாள் கார் விபத்தில் சிக்கி கொண்டார்.. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.. அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதனால், ரோசாவுக்காக சவப்பெட்டி தயாரானது.. ஜெபம் செய்துவிட்டு, ரோசாவை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டிக்குள் உறவினர்கள் வைத்தனர்.. திடீரென அந்த சவப்பெட்டியை எட்டி உதைத்தார் ரோசா..

சவப்பெட்டி
இதனால் வெலவெலத்து போன உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து, சவப்பெட்டியுடனேயே ரோசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் ரோசா மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது.. அதனால், உடனடியாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது... ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ரோசா, நிஜமாகவே இறந்துவிட்டார்.. அதுபோலவே, பீகாரில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. சரண் மாவட்டத்தில், கோபா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது..

விறகு சேகரித்த பெண்கள்
இங்குள்ள, மர்ஹா ஆற்றின் கரையில் ஒரு சுடுகாடு உள்ளது.. இந்த சுடுகாட்டுக்கு பக்கத்தில் காடு போன்ற பகுதி இருக்கிறது.. அந்த பகுதியில், சில பெண்கள் நேற்று காலை விறகு சேகரித்து கொண்டிருந்தனர்.. அப்போது மயானத்தில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது.. பலமுறை அந்த காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்ற நிலையில், இதுவரை அப்படி ஒரு சத்தம் மயானத்தில் இருந்து வந்ததில்லையாம்.. அதனால், அந்த பெண்கள் பேய் என நினைத்து, அலறி அடித்து கொண்டு வந்து கிராமத்தில் சொல்லி உள்ளனர்..

கல்லறை
பிறகு கிராம மக்கள் சேர்ந்து, சுடுகாட்டுக்குள் சத்தம் வந்த திசையை சென்று பார்த்துள்ளனர்.. அப்போதுதான், களிமண்ணில் இருந்து சத்தம் கேட்கவும், பதறி போய் தோண்ட ஆரம்பித்தனர்.. அப்போது, சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுமியின் வாயில் களிமண்ணை அடைத்து வைத்திருந்ததையும் அவர்கள் கண்டு மிரண்டு போய்விட்டனர்.

களிமண்
சிறுமியை மீட்ட கிராம மக்கள் உடனடியாக கோபாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்... உடனடியாக சிகிச்சையும் தரப்பட்டது.. அதற்கு பிறகு சிறுமி பேச ஆரம்பித்தார்.. தன்னுடைய பெயர் லாலி என்று சொன்னார்.. அப்பா பெயர் ராஜு சர்மா, அம்மா பெயர் ரேகா ஷர்மா என்றார்.. ஆனால், கிராமத்தின் பெயர் சொல்ல தெரியவில்லை.. அந்த சிறுமி மேலும் சொல்லும்போது, "என் அம்மாவும், என் பாட்டியும் என்னை கல்லறைக்கு அழைத்து வந்தனர்.. நான் அழுது கொண்டே இருந்தேன்.. அதனால், என் வாயில் களிமண்ணை திணித்தனர்.. பிறகு குழிதோண்டி என்னை புதைத்தனர்" என்றார்..

லாலி கண்ணீர்
இதைக் கேட்டு போலீசாரும், டாக்டர்களும் அதிர்ந்து போய்விட்டனர்.. அந்த சிறுமி யார் என்று இதுவரை தெரியவில்லை.. வேறு கிராமத்தை சேர்ந்த சிறுமியை, இங்கு கொண்டு வந்து உயிருடன் புதைத்து விட்டு போன அக்கிரமம் நடந்துள்ளது.. அவரது பெற்றோர் மற்றும் கிராமத்தை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்... பயந்து போயுள்ள லாலி இன்னமும் அழுதுகொண்டே இருக்கிறாள்..!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications