போராட்டத்தை தூண்டிவிட்டு.. தடியடி சமயத்தில் எஸ்கேப் ஆன பிரசாந்த் கிஷோர்? மாணவர்கள் ஆவேசம்!
பாட்னா: பீகாரில் சமீபத்தில் நடந்த போட்டி தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது அங்கு பகீர் கிளப்பியுள்ள நிலையில், தடியடி சமயத்தில் மட்டும் பிரசாந்த் கிஷோர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகச் சொல்லி மாணவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் போட்டி தேர்வுகளில் மோசடி நடப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அப்படிதான் கடந்த 13ம் தேதி நடந்த அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய தேர்விலும் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தன.

பீகார் போராட்டம்:
அந்த தேர்வுகளில் கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆனதாகவும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறி, அங்குள்ள மாணவர்கள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மாணவர்கள் திரண்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்வதே அவர்கள் திட்டமாக இருந்தது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் தேர்தல் ஆலோசகரும் ஜனசுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்தார். அவர் நேற்றைய தினம் இந்த போராட்டத்தில் பங்கேற்றும் இருந்தார். இதற்கிடையே மாணவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகச் சொல்லி நேற்றிரவு திடீரென மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் மாணவர்கள் பலரும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீதும், பிரசாந்த் கிஷோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர்:
போராட்டத்தின் போது இருந்த பிரசாந்த் கிஷோர், சரியாகத் தடியடி நடந்தபோது அங்குக் களத்தில் இருந்து மாயமாகியிருந்தார். இதுவும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகப் போராட்ட களத்திற்கு வந்த பிரசாந்த் கிஷோரை அங்கிருந்து கிளம்பும்படி மாணவர்கள் கூறினர். மேலும், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
பதற்றம்:
இதில் கோபமடைந்த பிரசாந்த் கிஷோர், "எங்களிடம் உதவிகளை வாங்கிக்கொண்டு இப்படி திமிராக நடந்து கொள்வது சரியா!" என்று கேள்வி எழுப்பினார். அவர் இப்படி கேள்வி எழுப்பியதும் அங்கிருந்த மாணவர்கள் கோபம் அடைந்தனர். ஏற்கனவே தடியடி தாக்குதலால் கோபத்தில் இருந்த மாணவர்களுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. ஆவேசமான மாணவர்கள், "தடியடியின் போது எங்குப் போனீர்கள்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் அங்கிருந்து கிளம்பினார்.
பிரசாந்த் கிஷோர் விளக்கம்:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த போராட்டத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.. இது முழுக்க முழுக்க மாணவர்களே முன்னின்று நடத்தும் போராட்டம். நான் இதற்கு ஆதரவு மட்டுமே தெரிவித்து வருகிறேன்.
மேலும், பீகார் போலீஸ் சொல்வது போல இதுபோன்ற போராட்டங்களுக்கு முன் அனுமதி எல்லாம் தேவையில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க அமைதியான முறையில் அணிவகுப்பு நடத்தியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்கனவே முடியாது. தலைமைச் செயலாளரைச் சந்திக்க முடிவு செய்திருந்த நிலையில், இதுபோல தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது.
என்ன நடந்தது:
அங்குப் பிரச்சினை உருவாவது போல இருந்ததால்.. மாணவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய பிறகே நான் இங்கிருந்து கிளம்பினேன்.. நான் கிளம்பிய பிறகு 45 நிமிடங்கள் கழித்தே தடியடி நடத்தப்பட்டுள்ளது. போலீசார் தடியடி நடத்தியதை ஏற்க முடியாது. இந்த விவரத்தை நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்" என்றார்.
மேலும், பீகார் அரசு வரும் 1ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தானே நேரடியாகப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications