Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதிஷூக்கு தலைவலி.. காங்கிரஸூக்கு டென்ஷன்.. பாஜகவுக்கு நெருக்கடி.. தேஜஸ்வி மட்டும் ஜாலி! பரபர பீகார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சட்டப்பேரவை தேர்தலை பீகார் மாநிலம் விரைவில் சந்திக்க உள்ளது.. இதையடுத்து, யார் ஆட்சியை பிடிக்க போவது என்பதில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன.. முதல்வர் நாற்காலியை தக்கவைத்துக்கொள்ள நிதீஷ் குமாரும், இந்த முறையாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸும் மும்முரமாகி உள்ளனர். இதனால் பீகார் அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு, இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

Bihar Nitish Kumar Tejashwi

பீகாரில் 13 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள்... இதில், 8 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.. இந்த வாக்குகளை யார் அள்ள போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..

விரைவில் தேர்தல்

இந்தமுறையாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி மும்முரம் காட்டி வருகிறது.. கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின்போதே காங்கிரசுக்கு நிறைய சிக்கல்கள் வந்துவிட்டன.. குறிப்பாக தேர்தலுக்கு சில நாட்களே இருந்தபோது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த நிதீஷ்குமார், கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து, வெளியேறியது, மிகப்பெரிய அடியாக காங்கிரசுக்கு விழுந்தது.. இதனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இந்தியா கூட்டணி இழந்திருந்தது.

அதனால்தான் இந்த முறையாவது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.. ஆனால், கடந்த முறையாவது கூட்டணி கட்சியால் தலைவலி வந்தது, இப்போது சொந்த கட்சி சலசலப்பில் சிக்கி கொண்டிருக்கிறது காங்கிரஸ்.. வழக்கமாக காங்கிரஸ் கோஷ்டி பூசல்கள் அனைத்து மாநிலங்களிலும் நிலவுவது இயல்பான விஷயம் என்றாலும், பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டிக்குள் உச்சக்கட்ட மோதல்கள் கிளம்பியிருக்கின்றன.

Bihar Nitish Kumar Tejashwi

காங்கிரஸ் ஏற்குமா?

அதுமட்டுமல்ல, தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு, ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் எதிர்ப்புகளையும், அதிருப்திகளையும், பொருமல்களையும் வெளிப்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டாலும், ராஷ்டிர ஜனதாதள கட்சி மெஜாரிட்டியாக வெற்றி பெற்று, தேஜஸ்வியை முதல்வராக ஏற்க சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் உள்ளிட்டோர்தான் முதல்வராக இறுதி முடிவை எடுப்பார்கள் என்று அஜித் சர்மா சொல்லவும், ஓடோடி வந்து அதனை மறுத்துள்ளது ராஷ்டிரிய ஜனதா தள கட்சி.. ஒருபடி மேல போய், சட்டமன்றத் தேர்தலை மகா கட்பந்தன் கூட்டணியின் தலைவராகவும், பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் தேஜஸ்வியே என்று உறுதியாக சொல்லவும், இதைக்கேட்டு, காங்கிரஸ் ஆடிப்போய் கிடக்கிறது.

சி-வோட்டர் நிறுவனம்

அதுமட்டுமல்ல, நிஜமாகவே தேஜஸ்வி மீதான எதிர்பார்ப்பும் கிரேஸூம் அம்மக்களிடம் ஓரளவு அதிகரித்திருக்கிறதாம்.. இதற்கு காரணம், சமீபத்தில் வெளியான சி-வோட்டர் நிறுவனம் கருத்து கணிப்புகள்தான். அதில் பெரும்பாலான கணிப்புகளில் தேஜஸ்வி முதல்வராக வர வேண்டும் என்று 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அதாவது, தேர்தல் களம் நிதிஷூக்கு சாதகமாக இல்லை என்பதைத்தான் அந்த கணிப்புகள் வெளிப்படுத்தியிருந்தன. இதையே தனக்கான ஓட்டாக மாற்ற தேஜஸ்வி காய் நகர்த்த துவங்கியிருக்கிறார். தேர்தலுக்கு கிட்டத்தட்ட 6 மாதங்கள் உள்ள நிலையில், இளைஞர்களின் வாக்குகளையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம்.

Bihar Nitish Kumar Tejashwi

தேஜஸ்விக்கு எகிறும் கிரேஸ்

இதன் உச்சக்கட்டமாக, ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தி, அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களில் கவனம் செலுத்துவேன் என்று தேஜஸ்வி தந்துள்ள வாக்குறுதிகள், பீகார் மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.

மற்றொருபுறம், நிதிஷ்குமார் நிலைகுலைந்து போயுள்ளதாக தெரிகிறது. எத்தனை பேருடன் மாறி மாறி கூட்டணி வைத்தாலும், தனக்கான இடத்தை மட்டும் இப்போதுவரை தக்க வைத்து வரும் நிதிஷ்குமாருக்கு, வெறும் 18 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தந்துள்ளதாக, சி-வோட்டர் நிறுவனம் கணிப்பில் தெரியவந்தது. இது பாஜகவுக்கும் லேசான கலக்கத்தை தந்துள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால் பீகாரை உச்சக்கட்ட வளர்ச்சியின் பாதைக்கு அழைத் செல்வோம் என்று பாஜக வாக்குறுதிகளை தந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையாக ரூ.22,000 கோடியை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Bihar Nitish Kumar Tejashwi

மக்களை ஈர்த்த மோடி பேச்சு

அப்போது மோடி பேசும்போது, "மத்தியில் பாஜக கூட்டணி அரசு தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் பலன்களை அவர்கள் பெற்றிருக்க முடியாது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகளில், சுமார் 3.7 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. முன்பு அரசுத் திட்டங்களின் முழுப் பலன்களையும் பெறாத சிறு விவசாயிகள் தற்போது தங்களுக்கு உரிய பலன்களைப் பெறுகிறார்கள். இடைத்தரகர்கள் சிறு விவசாயிகளின் உரிமைகளைச் சுரண்டுவது வழக்கம்.

முந்தைய அரசுகள் ஒதுக்கிய வேளாண் பட்ஜெட்டை விட மத்திய அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியுள்ள தொகை மிகவும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஊழல் நிறுவனங்களால் மேற்கொள்ள முடியாது.

பீகார் மாநில பிரச்சனைகள்

வெள்ளத்தால் பீகார் இழப்பை சந்தித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேற்கு கோசி கால்வாய் ஈஆர்எம் திட்டத்திற்கான ஆதரவு மூலம், மித்திலாஞ்சல் பிராந்தியத்தில் 50,000 ஹெக்டர் நிலம் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள்" என்று கூறியிருந்ததும் அரசியல் கணக்காகவே பார்க்கப்பட்டு வருகிறது.

ஆக, தேர்தலில் வெல்லப்போவது போவது நிதிஷ் குமாரா? அல்லது தேஜஸ்வியா தெரியவில்லை.. அப்படியே தேஜஸ்வி வென்றாலும், அவரை முதல்வராக்க காங்கிரஸ் சம்மதிக்குமா தெரியவில்லை.. அல்லது மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவரணி பொறுப்பாளர் கண்ணையா குமாரை, முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிடுமோ தெரியவில்லை. ஏனெனில் கண்ணையா குமாருக்கும் இப்போது பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.. மேலும், ஆளும்கட்சிக்கு எதிராக அவர் யாத்திரை மேற்கொண்டு வருவதால், கிரேஸ் நாளுக்கு நாள் எகிறி கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் என்ன செய்யும்

ஏற்கனவே, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி என ஒவ்வொரு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இந்த பீகார் தேர்தலைத்தான் பலமாக நம்பியிருக்கிறது.. எனினும், பாஜகவை முழு வேகத்துடன் எதிர்க்க முடியாமல், சொந்த கட்சியின் பூசல்களிலும் சிக்கி வருகிறது.

"சட்டப்பேரவை தேர்தலுக்குள் உள்கட்சி பூசல்கள் சரி செய்யப்படாவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதை யாராலும் தடுக்க முடியாது" என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான கிருஷ்ணா அல்லவறு பகிரங்கமாகவே போட்டு உடைத்துவிட்டார்.

ஆக, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் + முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு + தேஜஸ்விக்கு இளைஞர்களிடம் எகிறும் கிரேஸ் + நிதிஷூக்கான பின்னடைவு + பாஜகவின் தேர்தல் அறிவிப்புகள் போன்ற பரபரப்புகளில் சிக்கி கொண்டுள்ளது பீகார் மாநிலம்...!!

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+