பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாரில் யார் வெற்றி பெற்றாலும்... அது வரலாற்று வெற்றிதான்... எப்படி எனக் கேட்கிறீர்களா..?

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரின் அடுத்த முதல்வராக யார் வரக்கூடும் என்பதை அறிவதற்காக ஒட்டுமொத்த தேசமும் பீகாரை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது.

Recommended Video

    Bihar Election-ல் யார் வென்றாலும் வரலாறு தான்..ஏன் தெரியுமா? | Oneindia Tamil

    இந்த தேர்தலை பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக நாம் நிச்சயம் கருதலாம்.

    லாலுபிரசாத் யாதவ், சரத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் என முப்பெரும் தலைவர்கள் இல்லாமல் பீகார் தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    20 ஆண்டுக்கு பின்னர் வாக்குப்பதிவில் பீகார் மக்கள் தரமான சம்பவம்.. கலக்கத்தில் கட்சிகள் 20 ஆண்டுக்கு பின்னர் வாக்குப்பதிவில் பீகார் மக்கள் தரமான சம்பவம்.. கலக்கத்தில் கட்சிகள்

    யார் வென்றாலும்

    யார் வென்றாலும்

    பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானால் அதனை சாதாரண வெற்றியாக கடந்துவிட முடியாது. ஏறத்தாழ 15 ஆண்டுகாலம் பீகாரில் மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார் நிதிஷ். இப்போது நான்காவது முறையும் அவர் வெற்றிபெறுவாரேயானால் அது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக தான் கருதப்படும்.

    31 வயதில்

    31 வயதில்

    அதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றிபெற்று தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக வந்தால் அது இந்தியாவின் சரித்திர சாதனையாக பார்க்கப்படும். 31 வயதில் அதுவும் திருமணம் கூட முடிக்காத ஒரு இளைஞர் நாட்டின் முதல் முதலமைச்சரானார் என்ற சிறப்பை தேஜஸ்வி பெறக்கூடும். இப்படியாக யார் வென்றாலும் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும்.

    நாடாளுமன்றத் தேர்தல்

    நாடாளுமன்றத் தேர்தல்

    நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின்னர் வட மாநிலங்களில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல். அது மட்டுமல்லாமல் கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டில் நடைபெறும் முதல் தேர்தல் என்றும் சொல்லலாம். ஆகவே, இந்த தேர்தலை பொறுத்தவரை ஏதோ பீகார் மாநிலத் தேர்தல் என்று குறுகிய கண்ணோட்டத்திற்குள் பார்க்க இயலாது.

    முதல் தேர்தல்

    முதல் தேர்தல்

    பீகார் சட்டமன்றத் தேர்தலில் மற்றொரு முக்கிய விவகாரத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் தான் தனக்கு கடைசித் தேர்தல் என சென்ற இடங்களிலெல்லாம் உணர்ச்சிப்பொங்க பேசி வந்தார் நிதிஷ் குமார். அதேவேளை அவருக்கு சேலஞ்சராக திகழக்கூடிய தேஜஸ்விக்கு அவர் தலைமையேற்று முழுப் பொறுப்புகளை சுமந்து சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Whoever wins in Bihar, it is a historic victory
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X