Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதிஷ் குமாரை அதிகம் நம்பும் பெண்கள்.. அப்படி என்ன செய்தார்? பீகாரில் பாஜக கூட்டணி வென்றால் இதுதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. வரும் 14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 1951 முதல் பீகாரில் வரலாற்றில் இல்லாத வகையில் அதிகப்பட்ச ஓட்டுகள் பதிவாகி உள்ளது. பெண்கள் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். பொதுவாக இப்படி நடந்தால் ஆளும் கட்சிக்கு எதிரானதாக பார்க்கப்படும். ஆனால் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்தும் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி தான் வரும் என்று தெரிவித்துள்ளன. இது எப்படி? என விசாரித்தபோது தான் பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாருக்கு பெண்கள் அதிகளவில் ஓட்டளித்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்படி பெண்களை கவரும் வகையில் நிதிஷ் குமார் என்ன செய்தார்? வாங்க பார்க்கலாம்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதற்கு பீகார் மாநில பெண்கள் தான் காரணம். அம்மாநில பெண்கள் பாஜக கூட்டணியின் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

why-do-many-exit-poll-results-favour-for-nda-alliance-nitish-kumars-women-friendly-policies-likely

பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தல் 6 ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் நேற்றும் நடந்து முடிந்தது. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தற்போது 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மொத்தம் 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது வரலாற்றில் இல்லாத சம்பவம். பீகாரில் கடந்த 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்தாலும் இவ்வளவு வாக்குகள் ஒருபோதும் பதிவாகவில்லை. இதுதான் முதல் முறையாகும். முதல் இந்த வாக்குகள் நாளை மறுநாள் (நவம்பர் 14) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பொதுவாக ஒரு தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவானால் அது ஆளும் கட்சி மீதான அதிருப்தியையும், ஆட்சி மாற்றத்தையும் குறிக்கும். ஆனால் பீகாரில் தற்போது அதிக வாக்குகள் பதிவாகி இருந்தாலும் கூட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அதனை பிரதிபலிக்கவில்லை. ஒரெயாரு கருத்து கணிப்பு மட்டும் பீகாரில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த கருத்து கணிப்பை ஜர்னோ மிரர் நடத்தி உள்ளது. அதில், காங்கிரஸ் - ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளின் மகாபந்தன் கூட்டணி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, ஐக்கிய ஜனதாதளம் உள்பட அதன் பிற கட்சிகள் இணைந்த என்டிஏ கூட்டணி 100 - 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.

மற்றபடி பிற அனைத்து கருத்து கணிப்புகளும் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தான் தெரிவித்துள்ளன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் இது நடக்கும் பட்சத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மேலும் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பீகாரில் பெண்களின் ஓட்டுகள் தான் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பதிவாகி உள்ளது.

முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 76 லட்சத்து 77 ஆயிரத்து 219 பெண்கள் வாக்களித்துள்ளனர். இது மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 69.04 சதவீதமாகும். அதேபோல் 2வது கட்ட தேர்தலில் 1 கோடியே 74 லட்சத்து 68 ஆயிரத்து 572 பேர் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 74.03 சதவீதமாகும்.

முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது பீகாரில் பெண்கள் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இதுதான் பாஜக கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமார் மீதான நம்பிக்கையில் பெண்கள் பாஜக கூட்டணிக்கு அதிகளவில் ஓட்டளித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது நிதிஷ் குமார் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தி வந்தார். ஒவ்வொரு முறையும் அவர் இந்த பார்மூலாவை கடைப்பிடித்து வந்தார்.

இந்த முறையும் அவர் பெண்களை கவரும் வகையில் திட்டங்களை செயல்படுத்தினார். தேர்தலுக்கு முன்பாக முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனா என்ற திட்டத்தின் நிதிஷ் குமார் ரூ.10 ஆயிரத்தை பெண்களின் வங்கி வங்கிகணக்கில் செலுத்தினார். இதில் பல லட்சம் பெண்கள் பயனடைந்தனர். சுமார் 75 லட்சம் பெண்கள் பயன்டைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை ரூ.2 லட்சம் வரை உயர்த்தி வழங்குவதாக அவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார். பெண்களுக்கு சுயதொழில் வழங்கும் அடிப்படையில் இந்த திட்டத்தை நிதிஷ் குமார் சமீபத்தில் தொடங்கினார். அதில் சக்சஸ் ஆகும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் என்று கூறியிருப்பது பெண்களை அவருக்கு ஓட்டளிக்க வைத்து இருக்கலாம்.
மேலும் தேர்தலில் பாஜக கூட்டணி நிதிஷ் குமார் பெயரையே முன்நிறுத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது.பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தான் முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டது.

இது பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டில் பீகாரில் மதுபான விற்பனைக்கு நிதிஷ் குமார் தடை விதித்தார். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் அதனை செய்துகாட்டினார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குடிபோதை கணவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நிதிஷ் குமார் பக்கம் சாய்ந்தனர்.

அதேபால் பீகாரில் 9 ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதேபோல் முக்கிய மந்திரி கன்யா உத்யான் யோஜனா எனும் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு டிகிரி படிப்பு வரை நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 50 சதவீத பணிகளை பெண்களுக்கும், அரசு வேலைகளில் 35 சதவீத பணியிடங்களை பெண்களுக்கும் வழங்கி உள்ளார். இப்படி ஒவ்வொரு முறையும் நிதிஷ் குமார் பெண்கைள மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து பெண்கள் நிதிஷ் குமார் மீது நல்ல நம்பிக்கையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் பெண்கள் நிதிஷ் குமாரை தங்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் தலைவராக பார்க்கின்றனர்.

அதேவேளையில் பெண்களில் ஒரு தரப்பினர் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறுவது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அதிருப்தியில் உள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் நிதிஷ் குமார் பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலிலும் பெண்களின் ஓட்டுகள் தான் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடந்த முறையை விட அதிக இடங்களில் வெல்வதோடு, பாஜக கூட்டணியினரையும் வெற்றி பெற வைக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+