அடுத்த ஷாக்.. பெண்ணை நாசம் செய்து.. துப்பாக்கியால் சுட்டு.. எரித்த கொடூரம்.. அதிரும் பீகார்!
இளம்பெண்ணை பலாத்காரம் செய்து எரித்து கொன்றுள்ளனர்
பாட்னா: இன்னும் தெலுங்கானா பெண் டாக்டரை நாசம் செய்து எரித்து கொன்ற சம்பவத்தின் அதிர்வலையே அடங்காத நிலையில், இன்னொரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இளம்பெண்ணை நாசம் செய்து, துப்பாக்கியால் சுட்டு, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்துள்ளனர்.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ளது குகுதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பெண் மிக மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. பிறகு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.. இறுதியாக எரித்து சாம்பலாக்கி உள்ளனர்.

கருகிய சடலம்
பாட்னாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் கிடந்தது.. இன்று காலை கருகிய நிலையில் அதனை போலீசார் கண்டெடுத்தனர். காட்டுப்பகுதியில் கருகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக பொதுமக்கள் பார்த்து, போலீசுக்கு சொல்லவும்தான் இந்த விஷயம் வெளியெ தெரிந்துள்ளது.

இடுப்பு பகுதி
பெண் எரித்து கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியதுமே, அந்த பகுதியில் ஊர் மக்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். முதலில் எரிந்து போனது ஆணா, பெண்ணா என்றே தெரியாமல் இருந்தது.. அந்த சடலத்தின் இடுப்புக்கு கீழே மொத்தமாக எரிந்துள்ளது. இதைவைத்துதான், அந்த சடலம் பெண் என்றும், கொலை செய்யப்படுவதற்கு முன்பு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

சடலம்
ஆனால் சம்பந்தப்பட்ட பெண் யார், சிறுமியா, பெரிய வயது நபரா, எந்த ஊர், என்ன வயது என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது. எனினும் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்ணின் தலையில் ஒரு துப்பாக்கி குண்டு உள்ளது. அதனால் சுட்டு கொன்று, பின்னரே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போஸ்ட் மார்ட்டம்
சம்பவ இடத்தில் 2 துப்பாக்கி குண்டுகளின் பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனிடையே, தடயவியல் சோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது 20 வயது பெண் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பெண்ணின் கொலையில் முழு தகவலும் வெளியாகும். ஆங்காங்கே இப்படி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டு வருவது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications