ரூ.750 கோடி குடிநீர் திட்டம்; பெரம்பலூருக்கு ரயில் வசதி! பாரிவேந்தர் சாதித்தது என்ன?
பெரம்பலூர்: தனது பதவிக்காலத்தில் பெரம்பலூர் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ரூ.750 கோடி செலவில் மத்திய அரசுத் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளதாக பாரிவேந்தர் கூறியுள்ளார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது எம்பி நிதியிலிருந்து மட்டும் செலவழிக்காமல், அதைத் தாண்டி தனது அறக்கட்டளை மூலமாகவும் பல கோடிகளைச் செலவழித்துள்ளார் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர்.

இப்படி ஒரு புதிய நடைமுறையைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்துள்ள முதல் எம்பி பாரிவேந்தர்தான்.
இவர் ஆளும் கட்சி எம்பி அல்ல. இவருக்குப் பெரிய கூட்டணி பலமும் இல்லை. ஆனால், தன்னந்தனியாக நின்று பெரம்பலூர் தொகுதிக்குப் பல நல்ல திட்டங்களைப் போராடிக் கொண்டு வந்துள்ளார் இவர்.
ஆனால், அந்தத் திடங்கள் எல்லாம் ஆளும் கட்சியினரால் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டன என்கிறார்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பெரம்பலூர் தொகுதி வறண்ட மாவட்டம். இங்கே கிடைக்கின்ற நீராதாரத்தைக் கொண்டு, சின்ன வெங்காயம் என்பது அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.
பெரிய அளவுக்குத் தொழிற்சாலைகள் இல்லை. வேளாண்மை என்பதே பிரதானம். வெயில் காலங்கள் வந்துவிட்டால், மக்கள் குடிநீருக்கே திண்டாடும் நிலைதான் உள்ளது.
இவர் எம்பி ஆகப் பதவியேற்றவுடன் கோடைக் காலத்தில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் பகுதிகளுக்குத் தனியார் லாரிகளை வைத்து தண்ணீர் விநியோகம் செய்தார் பாரிவேந்தர்.
மக்கள் படும் துயரத்தைக் கண்டு, கடும் முயற்சி எடுத்து காவிரி- குண்டாறு- வைகை திட்டத்தை மத்திய அரசிடம் பேசி செயல்படுத்த வைத்தார். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.750கோடி.

இப்படிப் பல காரியங்களைச் செயல்படுத்தி உள்ளார் பாரிவேந்தர். அவரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? பெரம்பலூர் மக்கள் மீண்டும் இவரைத் தேர்வு செய்வார்களா? இப்படிப் பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பாரிவேந்தர்.
அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் "எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை போல் இல்லை இந்தத் தேர்தல். 4 முனை போட்டி நிலவுகிறது. கடந்த முறை அதிமுக, திமுக என்ற இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன. இப்போது அதிமுக தனி அணி. திமுக தனி அணி. பாஜக தனி அணி. கூடவே சீமான் ஒரு தனி அணி. ஆகவே போட்டிகள் அதிகம்.
எனவே எனது வெற்றி என்பது உறுதியானது. ஆனால், கடந்த முறை வாங்கிய அதே அளவுக்கான வாக்குகளையோ, அதற்கு அதிகமான வாக்குகளையோ எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், வாக்குகள் பிரிந்து உள்ளன.
எனது தொகுதிக்கு அளித்த அத்தனை வாக்குறுதியையும் செய்து முடித்துள்ளேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அதைத்தான் நான் செய்ய முடியும். ஆனால், அதையும் தாண்டி சொந்த அறக்கட்டளை மூலம் பல கோடிகளைச் செலவழித்திருக்கிறேன்.
இந்தப் பதவி இல்லை என்றாலும் நான் செலவழித்திருப்பேன். அது பரவலாகப் போய் இருக்கும். இந்தப் பதவியால் பெரம்பலூர் மட்டுமே கவனப்படுத்தி நிதி உதவிகளை அளித்தோம். அதில் ஒரு மகிழ்ச்சி.
அதைப்போல பல ஆண்டுகள் கனவுத் திட்டம் ஒன்று உண்டு. பெரம்பலூர் மக்களுக்கு ரயில் வசதி இல்லை. அது கிடைத்தால், அருகில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், நாமக்கல் இணைக்கப்பட்டால், என் தொகுதி மக்கள் நல்ல படிப்புகளைப் படிக்கப் பக்கத்தில் உள்ள மாவட்டங்களுக்கு எளிதாகப் பயணம் மேற்கொள்ள முடியும்.
விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை அடுத்த மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செயலாம். அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். ஆகவே 50 ஆண்டுகள் ரயில் வருமா? வராதா? எனத் தவித்த மக்களின் கனவைக் கிட்டத்தட்ட நிறைவேற்றித் தந்துள்ளேன். பல முறை ரயில்வே அமைச்சரைப் பார்த்து அழுத்தம் கொடுத்ததால், அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவே எனது சாதனைதான்.
காமராஜர் காலத்திலிருந்து கிடப்பில் போடப்பட்ட கனவுத் திட்டத்திற்கு நான் உயிர் கொடுத்துள்ளேன். அதை மக்கள் அறிவார்கள். கடந்த காலங்களில் இந்தத் தொகுதியின் எம்பியாக இருந்தவர்கள் கிடப்பில் போட்ட அந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து, அதில் கூடுமானவரை வெற்றியும் அடைந்துள்ளேன்.

விரைவில் மத்திய அரசு அதனைச் செயல்படுத்த உள்ளது. வருவாய் இல்லை என்று கைவிடப்பட்ட திட்டத்திற்கு மீண்டும் செயல்வடிவம் தருவது எளிதான பணி அல்ல. அதைச் செய்து முடிந்தது எனது சாதனைதான்.
பெரம்பலூர் தொகுதி என்பது வானம் பார்த்த பூமி. இங்கே பெரிய அளவில் ஆற்றுப்பாசனம் இல்லை. ஆகவே, கோடைக்காலங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது.
நான் பதவியேற்றதும் 2019இல் வெயில் காலத்தில் குடிநீர் பிரச்சினை வந்தது. அதைச் சரி செய்ய லாரிகளில் நீரைக் கொண்டு வந்து விநியோகித்தேன். அதைத் தொடர்ந்து செய்வதற்கு மிகப் பெரிய அளவில் பொருளாதாரம் தேவை. அதற்கு மாற்றாக ஆழ்துளைக் கிணறுகள் போன்ற திட்டங்களைச் செய்து தர வேண்டும்.
பெரம்பலூர் ஆட்சியர் கோரிக்கை வைத்ததன் பேரில் 10 மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு என்று சொல்லப்படும் ஆர்.ஓ. சிஸ்டம் அமைக்க எனது எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை மூலம் 1 கோடி வழங்கினேன்.
உடுப்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உட்பட மேலும் 4 கிராமங்களில் ஆர்.ஓ. சிஸ்டம் போடப்பட்டுள்ளது. யாரும் போய் எந்த நேரத்திலும் அதைப் பார்க்கலாம்.

எனது அறக்கட்டளை மூலம் 3 கிராமங்களில் போர்வெல் போட்டுக் கொடுத்துள்ளேன். ஒரு எம்பியாக எனது செயல்பாடு 100% அல்ல, அதற்கு மேல் 200% இருந்துள்ளது. ஏனென்றால், மத்திய அரசு நிதியை மட்டும் செலவு செய்யாமல் எனது அறக்கட்டளை நிதியையும் செலவு செய்துள்ளேன். எந்தளவுக்கு இந்தத் தொகுதி என்னால் பலன் பெற்றுள்ளது என்பதற்கு இவை எல்லாம் சாட்சிகள்.
ஆனால், எனக்கு ஒரு கேள்வி உள்ளது. மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது யார் கடமை? மாநில அரசின் கடமை. இந்த 60 ஆண்டுகால ஆட்சியில் திராவிட கட்சிகள் என்ன செய்தன?
காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்காக முதன்முதலாக மக்களவையில் குரல் கொடுத்தவன் நான் தான். அதன்பின்னர் தான் மத்திய அரசு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திட்டத்தைத் தொடங்கியது. இதற்காக 750 கோடி ஒதுக்கி இன்று வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது என் பதவிக் காலத்தில் எனக்குக் கிடைத்த வெற்றி இல்லையா?" என்கிறார் பாரிவேந்தர்.
-
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications