பெரம்பலூரில் தந்தையை கொடூரமாக மகன் தாக்கிய விவகாரம்.. எஸ்ஐ மீதும் பாய்ந்த நடவடிக்கை
பெரம்பலூர்: பெரம்பலூரில் தந்தையை கொடூரமாக மகன் தாக்கிய சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்ய காலம் தாழ்த்திய குற்றச்சாட்டில் சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). இவரது மனைவி ஹேமா . இவர்களுக்கு சக்திவேல் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சக்திவேல் பி.டெக் எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு, தனது தந்தையின் தொழில்களை கவனித்து வருகிறார்.

குழந்தை வேலுவுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ மில் ஒன்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ்மில் ஒன்றும் இருக்கிறது. இதில் குழந்தை வேலுவின் மகன் சக்திவேல், ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலை கவனித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக தந்தையின் தொழிலை நடத்தி வரும் சக்திவேல் கடன் பிரச்சனையில் சிக்கி உள்ளார். வெளியில் அதிக கடன் வாங்கியதால் கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால் தந்தையின் பெரம்பலூர் ரைஸ் மில்லின் பணத்தை பயன்படுத்த விரும்பி உள்ளார்..
ஆனால் அந்த பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலு தான் முழுமையாக அதனை பார்த்து வந்துள்ளார். தனது கடன் பிரச்சனைக்கு உதவ வில்லை என்று கூறி சக்தவேல், தனது தந்தை குழந்தைவேலு மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
கடந்த 16.02.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலுவிடம் இந்த விவகாரம் தொடர்பாக சக்திவேல் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர் சக்திவேல் குழந்தைவேலுவை தனது இரண்டு கைகளால் மாறி மாறி முகத்தில் குத்தி கொலை வெறியுடன் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை ரத்தம் சொட்ட சொட்ட முகத்தில் தாக்கி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த வழக்கை கைகளத்தூர் போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ பழனிசாமி விசாரணை நடத்தி வந்துள்ளார்.
அப்போது சிகிச்சை பெற்று வந்த குழந்தைவேலு நடந்த சம்பவம் தொடர்பாக தனது மகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றும் தனது மகன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கை.களத்தூர் காவல் நிலையத்தில் குழந்தைவேல் எழுதி கொடுத்துள்ளார். இதனியே எழுதி கொடுத்து வந்த பின்னர், குழந்தைவேல் வீட்டில் திடீரென இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கை.களத்தூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, குழந்தைவேலுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி உள்ளார்கள். குழந்தைவேலுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர், உடலில் வெளி காயங்கள் எதுவும் இல்லை என்று கூறியதுடன், இறப்பிற்கு நெஞ்சு வலி காரணமாக இருக்கலாம் எனவும், உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த பின் இறுதி அறிக்கை தருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையே குழந்தைவேலை, சக்திவேல் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகியது. இதுதொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே இறந்த குழந்தைவேலுவின் தந்தை அத்தியப்பன் தன்னையும் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக சக்திவேல் மீது கொடுத்த புகாரின்பேரிலும் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைவேலை, சக்திவேல் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய கை.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமியை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு தனசேகர், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோரிடம் விளக்கம் கேட்டும், சரியாக மேற்பார்வை செய்யாமல் இருந்ததற்கு அவர்களுக்கு எச்சரிக்கை குறிப்பாணை வழங்கவும், இந்த வழக்கை விசாரணை செய்ய மாவட்ட கூடுதல் எஸ்பி மதியழகனை நியமனம் செய்தும் , பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications