Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் வேனில் சென்ற வெள்ளைக் காளியை காலி செய்ய ஸ்கெட்ச்! பைபாஸில் ரவுண்ட் கட்டிய கும்பல்! பரபர சேஸிங்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீசார் மீது பெரம்பலூர் திருமாந்துறை அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாகவும்,
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ரவுடிக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சினிமா பாணியில் தோட்டாக்கள் படாமல் 2 கார்களில் கொலைக் கும்பல் தப்பியோடியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம், திருமாந்துறை அருகே சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தை வழிமறித்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்த மூன்று காவல்துறை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Perambalur Country Bomb Police

வெள்ளை காளி

தகவலறிந்தபோது, கைதியை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை தடுக்க போலீசார் முயன்றுள்ளனர். அப்போது, காரில் வந்த அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளையும் வீசியதாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைதியான வெள்ளை காளி மீது, ஒன்பது கொலை வழக்குகள், எட்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாட்டு வெடிகுண்டு தாக்குதல்

குறிப்பாக, மதுரை 'கிளாமர் காளி' கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். கடந்த மார்ச் 22, 2025 அன்று, மதுரை தனக்கன்குளம் பகுதியில், திமுக பிரமுகர் வி.கே. குருசாமியின் உறவினரான 'கிளாமர் காளி' என அழைக்கப்படும் காளீஸ்வரன், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை, 22 ஆண்டுகளாக நீடித்து வந்த கேங் வார் பகை காரணமாக நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸ் வேன் தாக்குதல்

இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக வெள்ளை காளி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த சுபாஷ் சந்திரபோஸ் பின்னர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில், கிளாமர் காளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெள்ளை காளியை, வேறொரு வழக்கிற்காக சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றபோதுதான், எதிர்தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை துப்பாக்கிச்சூடு

தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ரவுடிக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய் நிலையில், சினிமா பாணியில் தோட்டாக்கள் படாமல் 2 கார்களில் கொலைக் கும்பல் தப்பியோடியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+