ராத்திரியெல்லாம்.. ரெண்டு பேரும்.. தடையா இருந்த என்னை.. கொல்ல பார்த்தார்.. மனைவியின் பகீர் புகார்

மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்றுள்ளார் கணவன்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: "ராத்திரியெல்லாம் ரெண்டு பேரும்.. பேசிட்டே இருப்பாங்க.. இவங்க கள்ள உறவுக்கு நான் தடையா இருக்கிறேன்னுட்டு என்னை கிணத்துல தள்ளி விட்டு கொலை பண்ண பார்த்தாரு" என்று கணவன் மீது மனைவி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்தவர் சரவணன்.. இவரது மனைவி அன்பரசி.. தனிஷ்கா என்ற 4 வயது மகளும், மேகாஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.. இதில் தனிஷ்காவை தன்னுடைய அம்மா வீட்டில் விட்டு வளர்த்து வருகிறார் அன்பரசி.. அன்பரசிக்கு 31 வயதாகிறது.

சரவணன், அன்பரசி 2 பேருமே பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் காலேஜில் பேராசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இப்போது காலேஜ், ஸ்கூல் லீவு என்பதால், தனிஷ்காவையும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

குடும்பம்

குடும்பம்

இந்நிலையில், சரவணன், அன்பரசிக்கும் இடையே அடிக்கடி சண்டை வருமாம்.. இவர்களது சண்டை குடும்பத்தில் அனைவருக்குமே தெரிந்த சமாச்சாரம்தானாம்.. வழக்கம்பேல நேற்றும் சண்டை வந்தது.. பிறகு இரவு நேரம்.. வீட்டின் பின்பக்கமுள்ள கிணற்றில் இருந்து அன்பரசியின் அபய குரல் கேட்டது.

குழந்தை

குழந்தை

இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது, அன்பரசியும் குழந்தை மேனகாஸ்ரீயும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.. இதனால் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க போராடியும், குழந்தையை மட்டும் காப்பாற்ற முடியவில்லை.. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடிதான் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

விசாரணை

விசாரணை

இது சம்பந்தமாக போலீசார் அன்பரசியிடம் விசாரித்தனர்.. அப்போது அவர் கூறியதாவது: எனக்கு 2 குழந்தையுமே பெண்ணா பிறந்துடுச்சு.. இந்த குழந்தைங்க பிறந்ததில் இருந்தே வீட்டில் சண்டைதான்.. கணவன், மாமியார், நாத்தனார் எல்லலோருமே என்னை அடிச்சு கொடுமைப்படுத்தினாங்க.

வாக்குமூலம்

வாக்குமூலம்

என் கணவனுக்கு அதே காலேஜில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் உள்ளது.. 2 பேரும் நைட்டெல்லாம் மணிக்கணக்கில் போனில் பேசுவார்கள்.. வீடியோ காலும் பண்ணி பேசுவார்கள்.. இவங்களோட கள்ள உறவுக்கு நான் தொந்தரவா இருக்கிறதா நினைச்சாங்க.. அதனாலதான், என்னை கொலை செய்ய முடிவு பண்ணினாரு என் கணவன்.. அவர்தான் என்னை கிணத்துக்குள்ள தள்ளிவிட்டாரு" என்றார்.. இதையடுத்து போலீசார் சரவணன் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+