ரூ.127 கோடி! பெரம்பலூர் மக்களுக்கு செலவு செய்த பாரிவேந்தர் எம்.பி.! சுவாரசிய தகவல்
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் நடக்காத அதிசயம் ஒன்று இந்தத் தேர்தலைப் பொறுத்தளவில் நடந்துள்ளது. அது என்ன என்கிறீர்களா?
பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இல்லை எனச் சிலர் அடித்துப் பேசி வரும்போது, பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணியே உருவாகியுள்ளது. பல கட்சிகள் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. எந்தளவுக்கு பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே சரியான சாட்சி.

கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் பாஜக நேரடியாகப் போட்டியிட்டிருக்கிறது. பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணி சார்பில் அதே பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த 2019 தேர்தலில் அதிகப்படியாக 6,83,697 வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 2,80,179 வாக்குகளைப் பெற்று படுதோல்வியைத் தழுவினார்.
ஆனால், பாரிவேந்தர் கிட்டத்தட்ட 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் அவரது எதிரியை வீழ்த்தினார். கடந்த 2019 தேர்தலில் ஒரு சில வேட்பாளர்கள்தான் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதில் பாரிவேந்தரும் ஒருவர்.

இந்தளவுக்கு மாபெரும் வெற்றியை இவருக்கு வழங்கிய பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு, கடந்த 5 ஆண்டு காலத்தில் இவர் என்ன செய்திருக்கிறார்?
இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேடி அலையத் தேவையில்லை. ஏன் பெரம்பலூர் வாக்காளர்களே கூட அலையத் தேவையில்லை. ஆம்! வேறு எந்த எம்.பி.யும் செய்யாத ஒரு செயலை இவர் செய்திருக்கிறார்.
தொகுதிக்கு இதுவரை அவர் செய்த நலத்திட்டங்கள் என்ன? செலவழித்து எத்தனைக் கோடிகள்? நாடாளுமன்ற உறுப்பினர் நிதியைத் தாண்டி, தனது கல்வி நிறுவனங்களின் நிதியிலிருந்து எத்தனைக் கோடிகள் செலவழிக்கப்பட்டது? இப்படிப் பல விசயங்களுக்கான ஆதாரங்களை ஒரு புத்தகமாக அச்சடித்து தொகுதி மக்களுக்கு வழங்கி இருக்கிறார் பாரிவேந்தர்.

பெரம்பலூர் தொகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காகவும், கொரோனா தொற்றின் போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காகவும், கோயில் புனரமைப்பு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தருதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது எனக் கிட்டத்தட்ட 127 கோடி ரூபாய் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் மூலமாகச் செலவழிக்கப்பட்டுள்ளது என அந்தப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் பாரிவேந்தர்.
அதாவது மொத்தம் 1200 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காகச் செலவு, அவர்கள் பயில்வதற்கான பாடப் புத்தகங்களை வழங்குவதற்காகச் செலவு, விடுதியில் தங்கி, உண்டு படிப்பதற்கான செலவுகள் என இதற்காக மட்டும் சில கோடிகளை இவரது நிறுவனம் செலவழித்துள்ளது.
சரியாக அவர் கொடுத்துள்ள புள்ளிவிவரப்படி சொன்னால், 126,90,11,400 கோடி ரூபாயை இவரது கல்வி நிறுவனம் பெரம்பலூர் தொகுதி மக்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்காகச் செலவு செய்துள்ளது.
மீண்டும் தெளிவாகச் சொல்கிறோம். இந்தத் தொகையை அவர் தொகுதி நிதியிலிருந்து செலவழிக்கவில்லை. தனது நிறுவனங்களின் நிதியிலிருந்து செலவழித்துள்ளார்.

அப்படியா? அவரது நிறுவனம் செய்த செலவுகள் என்ன? நல்ல கேள்வி. அதற்கும் பாரிவேந்தரே பதிலளித்திருக்கிறார்.
கடந்த 2021- 2022 இந்த இரண்டு ஆண்டுகளில் உலகமே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டது. அந்த விபரீத அலையில் சிக்கிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் திண்டாடினர். இந்த நெருக்கடியான நேரத்தில் நாடே ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு என மக்கள் தவியாய் தவித்தனர்.
இந்தக் கொடுமையான காலகட்டத்தில் மட்டும் தனது நிறுவனங்களின் நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு ரூ.2,22,800,000 செலவு செய்துள்ளார் பாரிவேந்தர். அதாவது, கொரோனா பேரிடருக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவியது, மருத்துவ பொருட்கள் வாங்கப் பணம் இல்லாமல் தவித்த நோயாளிகளுக்கு உதவியது, வேலை விசயமாக வெளியூருக்குப் பிழைக்கச் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த போது, அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ளச் செலவு செய்தது போன்ற பல நல்ல காரியங்களுக்காக இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒரு எம்பிக்கு ஒதுக்கும் நிதியைத் தாண்டி, சுமார் 5 கோடியைத் தொகுதியில் ஆன்மிகம் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக இவர் தனது நிறுவனங்கள் மூலமாகச் செலவு செய்திருக்கிறார்.
பெரம்பலூரில் சரியான பராமரிப்பு இல்லாமல் கிடந்த கோயில்களைப் புனரமைப்பு செய்தது, அங்கே அன்னதான உதவிகளைச் செய்தது என்று கிட்டத்தட்ட 4.80.80,000 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டும் இல்லாமல் தொகுதியிலுள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காக இவர் தன் தனது பல்கலைக் கழகத்தின் நிதியிருந்து 1.09,00,000 ரூபாயைச் செலவழித்திருக்கிறார். பள்ளிகளுக்குக் கணினி வாங்கி கொடுத்தது, குடிநீர்த் தேவைக்காகப் போர் போட்டுக் கொடுத்தது, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வாங்கி கொடுத்தது போன்ற நலத் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது.
இப்படிக் கடந்த 5 வருடத் தனது பதவிக் காலத்தில் மட்டும் சுமார் 127 கோடியை, அதாவது ரூ.126,90.11,400 கோடியைச் செலவழிக்கப்பட்டுள்ளதாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளரைப் பேசவிடாமல் தனது செயற்பாட்டால் பஞ்சர் பண்ணி இருக்கிறார் பாரிவேந்தர்.

தமிழ்நாட்டில் தொகுதிக்காகக் கோடிக் கணக்கில் செலவு செய்த ஒரே எம்பி இவர் மட்டுமே. ஆக, இந்தத் தேர்தலில் இவரை வெற்றி பெற வைத்தால், இன்னும் பல நல்ல திட்டங்களைப் பெரம்பலூர் மக்கள் பெறுவார்கள் எனக் கட்டாயம் நம்பலாம்.
எப்படி முடிந்தது இவரால்? "நான் எம்.பி ஆன பிறகுதான் ஏதோ மக்களுக்காகச் சொந்த பணத்தைச் செலவு செய்கிறேன் என்று இல்லை. இதை நீங்கள் அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது. எங்கள் எஸ்.ஆர்.எம். கல்லூரி எப்போது பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்றதோ, அன்றிலிருந்து நாங்கள் மக்களுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

பலதரப்பட்ட மக்களுக்காகச் செலவு செய்யும் போது, அந்த நிதியை அப்படியே தொகுதி மக்களை மட்டும் குறிவைத்துச் செலவிடலாமே என்று ஒரு திட்டம் போட்டோம். அப்படி இதுவரை எங்களது நிறுவனங்களின் மூலமாகக் கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதி மக்களுக்காக ரூ. 127 கோடியைச் செலவு செய்துள்ளோம்" என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தருகிறார் பாரிவேந்தர்.

-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications