பெரம்பலூரில் கலெக்டருக்கே சர்ப்ரைஸ்.. திகைத்து நின்ற அரசு பள்ளி.. யாரிந்த சென்னை தொழிலதிபர்? தங்கமான மனசு
பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முதல் பொதுமக்கள் வரை, அருள்மணி என்பவரை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. இதனால், அருள்மணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது பெரம்பலூரில்? யாரிந்த அருள்மணி?
ஏழை மாணவர்கள் கல்வி கற்க எத்தனையோ வசதிகளை, நம்முடைய அரசு செய்து தருகிறது. இதனால், அனைவராலும் கல்வி கற்க முடிகிறது. ஆனால், 30, 40 வருடங்களுக்கு முன்பு ஏழ்மை காரணமாக எத்தனையோ பேர் கல்வி கற்க முடியாமல் இருந்தனர்.

குடும்ப சூழல், வறுமை
வறுமை, குடும்பச்சூழல், விழிப்புணர்வின்மை, அருகிலேயே பள்ளிகள் இல்லாமை போன்ற காரணங்களால், 8-ம் வகுப்பையே நிறைய பேரால் தாண்ட முடியவில்லை. எனினும், பல்வேறு சங்கடங்களுக்கிடையே படித்து முடித்தவர்கள், பல இடங்களில் இன்று அதிகாரிகளாக பதவி வகித்து வருகிறார்கள்.
இதில் சில பேர் தாங்கள் படித்த பள்ளிக்கு, தங்களால் ஆன உதவிகளையும் செய்து வருகிறார்கள். அந்தவகையில், 3 வருடங்களுக்கு முன்பு, விழுப்புரம் அருகே முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த கிராமப் பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி செய்திருந்தது, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஞ்சமின் என்பவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
சபாஷ் பெஞ்சமின்
தன்னுடைய கிராமத்துக்கும் தான் படித்த பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் 8 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்ததுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளார். மேலும், கடந்த 20 வருடங்களாகவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், பழங்குடியினப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
இதுபோலவே, பெரம்பலுார் மாவட்டத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி என்பவருக்கு இப்போது 61 வயதாகிறது.. இவர் சென்னை அசோக்நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அருள்மணி, "வெரிடாஸ் பவுண்டேஷன்" என்ற நிதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.
வெறும் 166 மாணவர்கள்
சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்திருந்தபோது, தான் படித்த லாடபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்றார். 1976ம் ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை இங்கு படித்திருக்கிறார்.
ஆனால், 1980ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும்கூட, அந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றுவரை இல்லாமல் இருப்பதும், இதனால் வெறும் 166 மாணவ - மாணவிகளே இப்போது அங்கு படித்து வருவதையும் அறிந்து வேதனை அடைந்தார்.
பளபளப்பாக மின்னும் அரசு பள்ளி
எனவே, தன்னுடைய சொந்த செலவில், வெரிடாஸ் பவுண்டேஷன் வாயிலாக, "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு'" பள்ளி திட்டத்தின் கீழ், தேவையான அடிப்படை வசதிகளை பள்ளிக்கு செய்து தர முடிவு செய்து, சிதிலமடைந்த பள்ளி மேற்கூரை, சுற்றுச்சுவர், விழா மேடை, கலையரங்கம், குளிர்சாதன ஆய்வகம், கழிப்பறை, சிசிடிவி கேமரா, கண்கவர் கார்டன், விளையாட்டு மைதானம், காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை 2.15 கோடி ரூபாய் செலவில் செய்து தந்துள்ளார்.
அருள்மணியின் முயற்சியால், இப்போது அந்த பள்ளி ஜொலிப்பில் மின்னுகிறது.. இந்த கட்டமைப்பு வசதிகளை பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் திறந்து வைத்தார்... அருள்மணி பள்ளியில் செய்து தந்திருந்த வசதிகளை கண்டு, கலெக்டர் முதல் கிராம மக்கள் வரை ஆச்சரியத்துடன் மலைத்து பார்த்தனர்.. அத்துடன் அருள்மணியையும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications