பெரம்பலூரில் தாசில்தாரை காணோமாமே.. லஞ்சம் வாங்கனதுமே திடீர்னு நெஞ்சை பிடித்து.. உறைந்து போன ஆபீசர்ஸ்
பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க 20000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெறவேண்டி, பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார்.. அப்போது தடையின்மை சான்று வழங்குவதற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் ரூ.20ஆயிரம் லஞ்சமாக கேட்டிருக்கிறார்..
விஏஓ: லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்... லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, துரைராஜ் ரூ.20 ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை பழனியப்பனிடம் தந்திருக்கிறார்.. அந்த பணத்தை, வாங்கி வைக்குமாறு அங்கிருந்த கீழக்கரை விஏஓ நல்லுசாமியிடம் பழனியப்பன் சொல்லி உள்ளார்.. உடனே நல்லுசாமியும் அந்த லஞ்ச பணத்தை வாங்கி வைத்திருக்கிறார்.
இதையடுத்து, இவர்கள் 2 பேரையுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள்.. அவர்களிடம் விசாரணையும் நடத்தினார்கள். விசாரணையின்போது துணை தாசில்தார் பழனியப்பன், தனக்கு நெஞ்சு படபடப்பாக இருப்பதாகவும், உடனே தன்னை மருத்துவமனையில் சேர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
பழனியப்பன்: இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பழனியப்பனை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. விஏஓ நல்லுசாமியை மட்டும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன், இன்று அதாவது ஜூலை 2ம்தேதி மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகிவிட்டாராம்.. விடிகாலை 3 மணிக்கு பழனியப்பன் தப்பிஓடியிருப்பதாக தெரிகிறது. எனவே, இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனியப்பனை தேடி வருகின்றனர்.
நெஞ்சுவலி: நெஞ்சுவலியால் தன்னை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பழனியப்பன் சொன்னபோது, மாவட்ட உயரதிகாரி ஒருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, பழனியப்பன் மீது கரிசனம் காட்டுமாறு சொன்னாராம். அந்த அதிகாரி சொன்னதாலேயே மருத்துவமனையில் பழனியப்பனை சேர்த்ததாக தெரிகிறது.
நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மருத்துவமனை டாக்டர்களிடம் பழனியப்பன் உடல்நிலை குறித்து கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு டாக்டர்கள், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, வேண்டுமென்றே நெஞ்சு வலிப்பதாக சொல்லியிருக்கிறார், உடல்நிலை நன்றாகவே இருக்கிறது என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
விசாரணை: இதைக்கேட்டு அதிர்ந்த அதிகாரிகள், இன்று காலை பழனியப்பனிடம் விசாரணை செய்ய திட்டமிட்டிருந்தனர்.. அதற்காக, நேற்றிரவு, மற்ற போலீஸ் அதிகாரிகளையும் தொடர்புகொண்டு, இன்று காலை மருத்துவமனைக்கு வந்துவிடும்படி கூறியிருக்கிறார்கள்..
அதன்படியே அனைத்து அதிகாரிகளும் மருத்துவமனைக்கு சென்றால், காலை 7 மணிக்கே பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ஸ்கேன் எடுக்க போவதாக சொல்லிவிட்டு வார்டிலிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதைக்கேட்டதுமே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாசில்தார்: இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஹேம சித்ரா சொல்லும்போது, "பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரது உயர் அதிகாரியான தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்... இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். இதுகுறித்து தாசில்தாரிடம் நான் அறிக்கை கேட்டிருக்கிறேன்" என்றார்.
தப்பி ஓடிய பழனியப்பனுக்கு 42 வயதாகிறது.. பெரம்பலூர் நாரணமங்கலம் இவரது சொந்த ஊராகும். ஒருவேளை அங்கு அவர் பதுங்கி இருக்கிறாரா என்று பெரம்பலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.. 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதுடன், நெஞ்சுவலி என்று பொய் சொல்லி, மருத்துவமனையிலிருந்தும் தாசில்தார் தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications