இதயத்தசையில் இரத்த அடைப்பால் அவதிப்படும் பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்!
திருப்பூர்: இதயத்தசையில் இரத்த அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிஞ்சு சிறுவனுக்கு உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுங்கள்!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் எனும் ஊரில் வசித்து வருகின்றனர் லோகேஷ் மற்றும் தேவி தம்பதியினர். இவர்களுக்கு வர்சித் (2 1/2) வயது ஆண் குழந்தை உள்ளார். லோகேஷ் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர் ஆவார்.

நன்றாக மழலை பேசி மனங்களை பூக்க வைத்த வர்சித்திற்கு மார்ச் 1 ந் தேதி பேச்சு மூச்சு இல்லாமல் போக ,பரிதவித்த பெற்றோர்கள் உடனே கோவை மெடிக்கல் சென்டர் ( KMCH) மருத்துவமனை கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை செய்ததில் (Myocarditis with multi organ failure) இதயத்தசையில் இரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் நுண் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதயத்திற்குச் செல்லும் பம்பிங் லெவல் குறைய குறைய இரத்தம் இடது கையில் உறையத் தொடங்கியது. உறையத் தொடங்கியதின் விளைவு இன்று இடது கையில் ஐந்து விரல்களும் மற்றும் உள்ளங்கை வரை அகற்றப் பட்டுள்ளது. திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் லோகேஷ் இருந்தது அனைத்தையும் விற்று இதுவரை பத்து லட்சத்திற்கு மேலே செலவு செய்துள்ளார்.
இதயத்திற்குச் செல்லும் இரத்தம் கழுத்தில் அடைபட்டுள்ளதால் இடது மூளை பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் கை கால் செயலிழந்து மற்றும் பேச்சும் அவ்வளவாக இல்லாமல் உள்ளது. தொடர்ந்து மருத்துவம் நடைபெற்று வருகிறது. மூளைக்கு மருந்தும் இரத்த அடைப்பை சீர் செய்யவும், பேசுவதற்கு பயிற்சியும் ,கை காலுக்கு பயிற்சியும் செய்ததில் 50% குணமடைந்துள்ளது.
தொடர்ந்து சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வருகின்றனர் வர்சித்தின் பெற்றோர்கள். முழுவதும் குணமாக இன்னும் ஆறு மாதங்கள் தொடர் சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என் தெம்பிற்கு இவ்வளவு செலவு செய்துள்ளேன் இனியும் செய்வேன் தற்போது 500000 ரூபாய்க்கு எங்கே போவேன் தயவுசெய்து நண்பர்கள் உதவ வேண்டுகிறேன் என வேதனையுடனும் வலியுடனும் கூறுகிறார்.
தூக்கி வளர்த்த பிள்ளை இவ்வளவு வலியுடன் கிடக்கிறானென வாய்குளற பேசுகிறார் லோகேஷ். உதவி அளிக்க உதவும் நல்லுள்ளங்கள் கீழ் கண்ட வகையில் உங்கள் நன்கொடையை வழங்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications