புதுவையில் திங்கள் வரை.. 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. எவற்றுக்கெல்லாம் அனுமதி தெரியுமா?
புதுச்சேரி: புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வருகிற திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழகத்தை போன்று புதுவையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

முழு ஊரடங்கு
இது தவிர மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் வெள்ளிக்கிழமைஇரவு 10 மணி முதல் 26-ம் தேதி(திங்கள்கிழமை) காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் வழங்கப்படாததால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

திங்கள் காலை 5 மணி வரை
இந்த நிலையில் புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வருகிற திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கை மீறி யாரவது செய்லபடுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊரடங்கின்போது எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? என்பது குறித்து இப்போது காண்போம்.

பஸ்கள் இயங்கும்
* மளிகை, காய்கறி, பழக் கடைகள், பால் அங்காடிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், மருந்துப்பொருள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.
* மருத்துவமனைகள் மருத்துவம் சார்ந்த பணி செய்வதற்கு எந்த தடையும் இல்லை.
* அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கும். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.
* உணவுகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கவும், ஓட்டல்களில் இருந்து எடுத்து செல்லவும் தடையில்லை.

திருவிழாக்கள் தடை
* அரசு அலுவலகம் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பஸ்களில் பயணங்கள் செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை எடுத்து செல்ல வேண்டும்.
* பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்சு அலுவலகங்கள், ஏடிஎம் இயங்கலாம்.
* மத விழாக்கள், திருவிழாக்கள் தடை செய்யப்படுகிறது. ஆனால் கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு நடத்தலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications