மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில்.. வெடித்து சிதறிய பாய்லர்.. பயங்கர தீ விபத்து.. 4 பேர் படுகாயம்!
புதுச்சேரி: புதுவையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மருந்து தயாரிக்கும் நிறுவனம்
புதுவை மாநிலம் மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளாமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பாய்லர் வெடித்து சிதறியது
இந்த நிலையில் இன்று மாலை நிறுவனத்தில் இருந்த பாய்லர் ஒன்று திடீரென வெடிதது சிதறியது. பாய்லர் வெடித்து சிதறிய வேகத்தில் அங்கு தீப்பற்றியது. முதலில் சிறிய அளவு பற்றி எரிந்த தீ வேகமாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
அங்கு இருந்த ஊழியர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் படுகாயம்
இந்த தீ விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications