பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 டெபாசிட்! புதுச்சேரியில் அமலுக்கு வரும் புதிய திட்டம்!
புதுச்சேரி: பெண் குழந்தைகள் பிறந்தால் அரசு சார்பில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் புதுச்சேரியில் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதற்கான பணிகளை அதிகாரிகள் மூலம் விரைவுப்படுத்தி வருகிறார் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி.
பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் மத்தியில் ரெங்கசாமி கொண்டு வரவுள்ள இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்றால் குறைந்தது 5 ஆண்டுகள் புதுச்சேரியில் குடியிருந்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

புதுச்சேரியில் புதுமையை புகுத்த விரும்பிய முதலமைச்சர் ரெங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பெண் குழந்தைகள் பிறந்தால் ஐமபதாயிரம் ரூபாய் வைப்புத் தொகை, கியாஸ் சிலிண்டர் மாணியம் ரூ.300 என மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வைப்புத் தொகை செய்யும் திட்டத்துக்கு இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் புதுச்சேரியில் மிக விரைவில் அமலுக்கு வரவுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்தப் பணம் வழங்கப்படுகிறது.
கடந்த மார்ச் 17ஆம் தேதிக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவருக்கும் இந்த வைப்புத் தொகை வழங்கப்படவுள்ளது. அஞ்சலகம் அல்லது வங்கி என இரண்டில் ஒன்றில் இந்தத் தொகை டெபாசிட் செய்யப்படும். 21 வயதுக்கு பிறகு முதிர்வுத் தொகை கைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications