டிராபிக்கில் நின்ற வாலிபர்.. புல்லட்டில் புகுந்த சாரை பாம்பு.. அலறியடித்து ஓட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த வாலிபரின் புல்லட்டில் சாரைப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

புதுச்சேரி அருகே கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சொந்த வேலை காரணமாக இன்று தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நகருக்கு வந்துள்ளார். அப்போது, புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தனது புல்லட்டில் நின்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில் விக்னேஷ் மீது திடீரென மரத்திலிருந்து சாரைப் பாம்பு ஒன்று விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தெரித்து ஓடினார். இதனையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டமாக கூடினர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை, மெக்கானிக் உதவியுடன் வெளியே எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மைகாலமாக புதுச்சேரி நகரில் பாம்புகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு வனத்துறை ஊழியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தொல்லை வேறு.. இதில் பாம்புகள் வேறயா.. என்று புதுவை மக்கள் புலம்புகின்றனர்.


-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications