Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அனுமதிக்கலையே".. காரில் ரங்கசாமி சொன்ன அந்த வார்த்தை! வீடியோவை லீக் செய்தது யார்? சிக்கிய தமிழிசை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் - துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், நேற்று வெளியான ரங்கசாமியின் வீடியோ ஒன்று இணையத்தை உலுக்கி உள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் + பாஜக இணைந்து அங்கு கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் தற்போது அங்கு துணை நிலை ஆளுநர்.

இருப்பினும் அங்கு தமிழிசைக்கும் ரங்கசாமிக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. பொதுவாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் மோதல் இருக்கும். அதிலும் யூனியன் பிரதேசங்களில் மிக கடுமையான மோதல்கள் இருக்கும்.

புதுச்சேரி

புதுச்சேரி

யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களை துணை நிலை ஆளுநர்கள் வேலை பார்க்கவே விடுவது இல்லை என்ற புகார்கள் உள்ளன. புதுச்சேரியில் பாஜக + என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தும் கூட இந்த மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில்தான் ரங்கசாமியின் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து உள்ளது. அதில் காரில் சென்ற அவர் வழியில் இருக்கும் சில வயதான பெண்களை பார்த்ததும் அவர்களின் குறைகளை கேட்க காரை நிறுத்துகிறார். அப்போது அந்த பெண்கள்.. ஐயா எங்களுக்கு ரேஷனில் பொருட்கள் கொடுக்க சொல்லுங்கள். ரேஷன் கடையையே திறக்கவில்லை. பொருட்கள் கொடுங்களேன் என்று கூறியுள்ளனர்.

ரங்கசாமி

ரங்கசாமி

தொடர்ந்து பேசிய ரங்கசாமி நான்தான் ரேஷன் அட்டைக்கு பணம் கொடுத்து இருந்தேனே என்று கூற.. பணம் எல்லாம் செலவாகிவிடும். பொருட்கள் இருந்தால் நன்றாக இருக்கும். பழையபடி ரேஷனில் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று அங்கு இருந்த பெண்கள் கூறியுள்ளனர். இதற்கு ரங்கசாமி.. அதுக்குத்தான் அனுமதிக்கவில்லையே என்று ஒரே அடியாக மத்திய அரசின் மீது விமர்சனத்தை ரங்கசாமி வைத்து இருக்கிறார். மேலும் ரேஷனில் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் மத்திய அரசு எங்களுக்கு அனுமதி தரவில்லை.

பணம்

பணம்

மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் ரேஷனில் பொருட்கள் கொடுக்க முடியும். வேண்டுமென்றால் உங்களின் தனிப்பட்ட கணக்கிற்கு பணம் போடுகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த பெண்கள், பணம் எல்லாம் வேண்டாம். உங்களை நாங்கள் தானே ஜெயிக்க வைத்தோம். நல்லது செய்வீர்கள் என்றுதானே ஜெயிக்க வைத்தோம். நீங்களே எங்களுக்கு நல்லது செய்யுங்கள் . ரேஷனில் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள், என்று பதில் அளித்துள்ளனர்.

ரேஷன்

ரேஷன்

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்குவது இல்லை. அரசு வழங்கும் ரொக்க பணம் தவிர வேறு எதற்காகவும் ரேஷன் கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதற்கு எதிராக புதுச்சேரியில் பல்வேறு கட்சிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்த இலவச அரிசியும் கூட நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளை இப்படி மூட காரணம் மத்திய அரசுதான் என்று ரங்கசாமி மக்களிடம் தெரிவித்து உள்ளார். அதோடு அவரின் வீடியோவும் வெளியாகி உள்ளது.

வீடியோ

வீடியோ

இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் வீடியோ காரின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. கார் உள்ளே இருந்து முதல்வருக்கு நெருக்கமாக யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அப்படி இருக்க மத்திய அரசுக்கு எதிராக ரங்கசாமி பேசும் வீடியோவை முதல்வர் ரங்கசாமியை வெளியே விட சொன்னாரா? தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்த இந்த வீடியோவை வெளியே விட சொன்னாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கூட புதுச்சேரியில் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்று ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்தார்.

மக்கள் அரசு

மக்கள் அரசு

அதில், என்னால் புதுச்சேரியில் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசால் சரியாக பணிகளை செய்ய முடியவில்லை. அதிகாரிகள் எனக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். எனக்கு போதிய அதிகாரம் இல்லாமல் இருக்கிறது. புதுச்சேரியை மாநிலமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும். மாநில அந்தஸ்து கொடுத்தால் மட்டுமே புதுச்சேரியில் நலத்திட்டங்களை கொண்டு வர முடியும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மரியாதை இல்லை. மக்கள் என்னை தேர்வு செய்து உள்ளனர். ஆனால் எனக்கு போதிய அதிகாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மனஉளைச்சலாக இருக்கிறது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

நீதிமன்றம் இந்த அரசு ஒரு பணியை செய்ய வேண்டும் என்று உத்தரவு போடுகிறது. அதை செய்ய நினைத்தால் அதிகாரிகள் செய்ய மறுக்கிறார்கள். என்னுடைய உத்தரவிற்கு மதிப்பில்லாமல் இருக்கிறது. நான் போடும் உத்தரவுகளை எப்படி எல்லாம் தடுக்க வேண்டும் வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறார்கள். எனக்கு ஆதங்கமாக இருக்கிறது என்று ரங்கசாமி குறிப்பிட்டார். ரங்கசாமியின் இந்த பேச்சு காரணமாக புதுச்சேரியில் முதல்வருக்கும் - துணை நிலை ஆளுநருக்கும் இடையில் உள்ள மோதல் வெட்ட வெளிச்சம் ஆனது. இவர்கள் மோதிக்கொள்வது உறுதியானது குறிப்பிடத்தக்கது. அங்கு முதல்வரின் பணிகளை தமிழிசைதான் செய்கிறார். முதல்வருக்கு அதிகாரமே இல்லை. முதல்வர் விதிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் கேட்பதே இல்லை. அதிகாரிகள் தமிழிசை சொல்வதைத்தான் கேட்கின்றனர் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட ரங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார் என்று விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ரங்கசாமியின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+