சீங்கப்பூரிலிருந்து புதுச்சேரி வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி... ஜிப்மரில் தீவிர சிகிச்சை
Recommended Video
புதுச்சேரி: சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனா முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரகணக்கானோருக்கு நோய் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க 8 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கோரிமேடு அரசு தொற்று நோய் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் மூன்று சீனர்களுடன் பழகி வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பிய அந்த வாலிபருக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த வாலிபருக்கு, அங்குள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications