பற்ற வைத்த தமிழிசை! பக்கா பிளானோடு புதுச்சேரி வரும் அமித் ஷா! டாப் புள்ளிக்கு கால் கட்டு போட பிளான்?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், புதுச்சேரிக்கு வர அமித் ஷா முடிவு செய்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு இரண்டு விவகாரங்களை மையப்படுத்தி இருந்தது. ஒன்று தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவுடன் நிலவும் மோதல். இரண்டாவது புதுச்சேரி அரசியல் நிலவரம்.

என்ன பேசினார்?

என்ன பேசினார்?

இந்த சந்திப்பில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை பற்றி புகார் வாசித்துள்ளார் தமிழிசை. தன்னை மதிக்கவில்லை, தனக்கு உண்டான மரியாதையை கொடுக்கவில்லை. அரசு நிகழ்வுகளுக்கு என்னை அழைக்கவில்லை என்றெல்லாம் தமிழிசை புகார் அளித்துள்ளார். நான் சட்டப்படிதான் செயல்படுகிறேன். ஆனால் ஆளுநருக்கு உரிய மரியாதையை அவர்கள் கொடுக்கவில்லை என்று தமிழிசை புகார் அளித்து இருக்கிறார்.

வேறு என்ன புகார்

வேறு என்ன புகார்

அதேபோல, புதுச்சேரியின் முதல்வர் ரெங்கசாமி தரப்பிலிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு இல்லை என்று தமிழிசை புகார் அளித்ததாக தகவல்கள் வந்தன. தலைமைச் செயலாளரிடம் இது பற்றி நான் கேள்வி எழுப்பினால், "பாஜகவின் சீனியர் அமைச்சர் நமச்சிவாயம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாரே... என அலட்சியமாக சொல்கிறார்கள் ஆளும் கூட்டணியில்" என்று புலம்பியிருக்கிறாராம் தமிழிசை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

 என்ன புகார்

என்ன புகார்

அதாவது புதுச்சேரியில் சட்டப்படி துணை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அங்கு துணை ஆளுநராக கிரண் பேடி இருந்த போது அதிகாரத்தோடு பல விஷயங்களை கட்டுப்படுத்தினார். தற்போது அங்கு என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி இருக்கிறது. இதனால் துணை ஆளுநர் தமிழிசைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. இதை பற்றி அமித் ஷாவிடம் தமிழிசை பேசியதாக கூறப்படுகிறது.

அமித் ஷா

அமித் ஷா

இந்த நிலையில்தான் அமித் ஷா தற்போது புதுச்சேரிக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமித் ஷா புதுச்சேரி வருகிறார் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 24ம் தேதி அமித் ஷா புதுச்சேரி வரும் நிலையில் அங்கு பல்வேறு கூட்டங்களை நடத்த உள்ளார். பல அரசியல் ரீதியான சந்திப்புகளை அமித் ஷா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் புதுவையில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு கால் கட்டு போடும் வகையில் அமித் ஷா இந்த பயணத்தை மேற்கொள்ள போகிறார் என்றும் கூறப்படுகிறது.

 புதுச்சேரி

புதுச்சேரி

முன்னதாக டெல்லிக்கு தமிழிசை தனியாக போனது விமர்சனத்திற்கு உள்ளானது. பாஜக கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அழைத்து செல்லாமல் தனியாக துணை நிலை ஆளுநர் தமிழிசை மட்டும் சென்றது விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் முதல்வரை அழைக்காமல் தனியாக சென்றதாக எண்ண வேண்டாம். நானும் முதல்வரும் மாநில நலனுக்காக இணைந்துதான் பணியாற்றி வருகிறோம் என்று தமிழிசை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+