புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுகவுக்கு 2 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் அமையும் அடுத்த ஆட்சியில் அதிமுக உரிய பங்கைக் கேட்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள் இடம்பெறுவது உறுதி என்றும் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. ஒருபக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. மறுபக்கம் மீண்டும் பாஜகவுடன் தான் கூட்டணி என அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ரங்கசாமி புறக்கணித்தார்.

மேலும் பாஜகவுடன் கூட்டணியை ரங்கசாமி முறித்துக்கொள்ள இருப்பதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் தற்போது முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்தார். நேற்று புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், 10 தொகுதிகளில் பாஜகவும், தலா இரண்டு தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் அதிமுக ஆகியோரும் போட்டியிட உள்ளன. பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்பழகன், "புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாய கூட்டணி தான் ஆட்சியமைக்கும். புதுச்சேரியில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும். அமைச்சரவையில் அதிமுக கண்டிப்பாக இருக்கும்" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தொகுதிப் பங்கீடு குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் இந்த 2 தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எண்ணிக்கையை விட, கூட்டணியின் வெற்றியே எங்களுக்கு முக்கியம்" என அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்துப் பேசிய அன்பழகன், புதுச்சேரியில் அமையும் அடுத்த ஆட்சியில் அதிமுகவின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதை உறுதிபடக் கூறினார். புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் அதிமுக உரிய பங்கைக் கேட்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள் இடம்பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications