2 நாள் கடையெல்லாம் லீவு.. இந்தப் பக்கம் வந்துராதீங்க.. "நடுக்கத்தில்" புதுச்சேரி "குடி"மக்கள்!!
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 23 ஆம் தேதி காலை 8 மணி முதல் 6 மையங்களில் எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும், மாநில தேர்தல் துறை விரிவாக செய்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி மாலை 4 மணி வரை இரண்டு நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளையும் மூடி வைக்கும்படி கலால் துறை துணை ஆணையர் தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தடையை மீறி மது விற்பனை செய்தால் கலால்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை ஆணையர் தயாளன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இரண்டு நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது புதுச்சேரி குடிமகன்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications