Amphan cyclone: ஆம்பனால் குளிர்ச்சியான புதுச்சேரி.. புதுச்சேரி மக்கள் ஹேப்பி..
புதுச்சேரி: வங்ககடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Recommended Video

வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'ஆம்பன்' என பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆம்பன் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் ஆம்பன் புயல் இன்று மாலை அதி தீவிர புயலாக மாறி வரும் 20 ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்திற்கும், வங்கதேசத்துக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் மீனவர்கள் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், வங்ககடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications