அரவிந்தர் ஆசிரம அன்னையின் 142 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவிந்த வெளிநாட்டினர்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற அன்னையின் 142 வது பிறந்த நாள் விழாவில் நாடு முழுவதிலிருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கூட்டு தியானம் மற்றும் தரிசனத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் உலக அளவில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் ஆசிரமத்திற்கு வருகைபுரிந்து, இங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து தியானம் செய்து மனதை அமைதிப்படுத்திச் செல்கின்றனர்.

அதேபோல் புதுச்சேரியை அடுத்த ஆரோவில், சர்வதேச நகரை அமைத்த அன்னை பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்ரவரி மாதம் 21 ம் தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா ஆகும்.

சிறிய வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் ஆன்மீக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1914-ல் புதுச்சேரி வந்தார். அன்னையின் பெரும் முயற்சியால் தான் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டன.

இன்று அன்னையின் 142 வது பிறந்த நாளையொட்டி, இன்று காலை முதல் அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறை பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. மேலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

பின்னர் கூட்டு தியானமும் மேற்கொண்டனர். அன்னையின் பிறந்தநாளையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications