புதுச்சேரி சபாநாயகர் பதவியை கைப்பற்றிய பாஜக.. ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு.. இதுதான் முதல்முறை
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கு என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த மே மாதம் 7ஆம் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது குறித்துக் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
இந்தச் சூழலில் என்ஆர்காங்கிரஸ்- பாஜக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்திருந்தார்.
நேற்று பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது. தற்போது தற்காலிக சபாநாயகராக உள்ள லட்சுமி நாராயணன், ஏம்பலம் செல்வம் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்
புதுச்சேரியில் அரசியல் வரலாற்றிலேயே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications