Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்துமீறிய பாஜக! பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து.. பஸ்ஸை உடைத்து அடாவடி! வெளியே போ.. சீறிய பெற்றோர்கள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: திமுக எம்பி ஆ. ராசாவை எதிர்த்து இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பாக புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்து மதம் மற்றும் சனாதனம் பற்றி திமுக எம்பி ஆ. ராசா பேசியதில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அவரின் பேச்சுக்கு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களையும் செய்து வருகின்றனர்.

ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார்.

 இந்து முன்னணி

இந்து முன்னணி

இந்த நிலையில் ஆ. ராசாவை எதிர்த்து பாஜக சார்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவைக்கு இன்று ஆ. ராசா எம்பி வருகிறார். நீலகிரி செல்வதற்காக அவர் விமான நிலையம் வருகிறார். இந்த நிலையில் கோவையில் இன்று பல இடங்களில் பாஜக போராட்டம் நடத்துகிறது. அதேபோல் புதுச்சேரியில் பாஜக சார்பாக பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் இன்று இந்து முன்னணி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

பாஜக

பாஜக

இந்த நிலையில் பந்த்திற்கு இடையே இயங்கும் பள்ளிகள் மீது இந்து முன்னணியினர், பாஜகவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்,.. அதன்படி உப்பாலாம் அருகே இருக்கும் தனியார் பெண்கள் பள்ளி ஒன்றுக்குள் புகுந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு தற்போது காலாண்டு தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. +1 மற்றும் +2 மாணவிகளுக்கு மட்டும் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரி

உள்ளே சென்ற பாஜகவினர்.. எல்லோரும் வெளியே போங்க என்று கூறி போராட்டம் செய்தனர். நாங்க பந்த் நடத்திக்கிட்டு இருக்கோம். நீங்க என்ன கிளாஸ்ல இருக்கீங்க வெளியே போங்க என்று போராட்டம் செய்தனர். தேர்வு எல்லாம் பிறகு செய்து கொள்ளலாம். இப்போ வெளியே போங்க என்று கூறி போராட்டம் செய்தனர். மாணவிகள் இருக்கும் வகுப்பிற்குள் புகுந்து அத்துமீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 மாணவிகள்

மாணவிகள்

அதேபோல் வெளியே இருந்த பேருந்துகளின் கண்ணாடிகளையும் உடைத்து சேதம் செய்தனர். இதனால் அங்கு மாணவிகள் அச்சத்திற்கு உள்ளார்கள். இதை அறிந்து உடனே அங்கு பெற்றோர்கள் குவிந்தனர். மாணவிகள் இருக்கும் பள்ளிக்குள் நீங்கள் எப்படி வரலாம் என்று பெற்றோர்கள் கோஷம் போட்டனர். அதோடு பாஜகவினரை அங்கிருந்து வெளியே செல்லும்படி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 பெற்றோர்

பெற்றோர்

இதனால் பாஜகவினர் பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளியில்தான் நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமா"? இங்குதான் நீங்கள் போராட்டம் செய்ய வேண்டுமா ? வெளியே போ... இங்கே இருக்காதீங்க என்று மக்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் மாணவிகள் தேர்வு எழுதுவதும் பாதிக்கப்பட்டது. அங்கு இருந்த பாஜகவினரை விட பெற்றோர்கள் அதிகம் இருந்ததால்.. கடைசியில் வேறு வழியின்றி பாஜகவினர் வெளியேறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+