மோடி கூட்டத்தில் பாட்டிகள்.. புதுச்சேரி பாஜகவின் புதுப் புது டெக்னிக்!
புதுச்சேரி: பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் வயதான பெண்களை அதிகம் காண முடிந்தது.
Recommended Video
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று (பிப்.25) பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இதற்காக, இன்று காலை புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இனி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வருவது சந்தேகமே.

வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரியை சிறந்த மாநிலமாக உருவாக்குவதே எனது தேர்தல் வாக்குறுதி என்றும் கூறினார்.
இந்த கூட்டத்தில் அதிகளவில் வயதான பாட்டிகளையும், நிறைய பெண்களையும் காண முடிந்தது. பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு கட்சிக்காரர்கள் திரளாக ஆட்களை அழைத்து வருவது வாடிக்கை தான் என்றாலும், வயதான பாட்டிகளே இந்த கூட்டத்தில் காணப்பட்டனர்.
அதில் பலர், மேடையில் என்ன நடக்கிறது, கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள் என்ற எந்த முனைப்பும் இல்லாமல், ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து இருப்பது போல் உட்கார்ந்திருந்தனர். சிலரோ, நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்ற மோடில், அருகில் இருந்தவர்களிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தனர். இதில், பெரும்பாலான பாட்டிகள், பெண்கள் கிராமப்புறங்களில் இருந்து அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து கோவை வந்தடைந்த பிரதமர் மோடி கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications