மோடி உத்தரவு.. மெழுகுவர்த்தி ஏற்றிய கிரண்பேடி மற்றும் நாராயணசாமி!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஒளிரச் செய்தார்.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 99 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரி அரசும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு

இதனிடையே நேற்று முன்தினம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, இன்று இரவு 9 மணிக்கு மக்கள் தங்களது வீடுகளில் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில், விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றியும், மார்ச் மூலமாகவும் ஒளிரச் செய்தார்.

இதேபோல் ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி ஒளிரச் செய்தார். மேலும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்போன் லைட் மூலமும் ஒளிரச் செய்தனர்.

-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications