நான் ஆட்சிக்கு வந்தால்! பெண்களுக்கு மாதம் ரூ 4000, இலவச LPG! மார்டின் மகன் சார்லஸ் வாக்குறுதி!
புதுவை: புதுவைக்கு எனது பாக்கெட்டில் இருந்து ரூ 100 கோடி செலவிடத் தயாராக இருப்பதாகவும் பெண்களுக்கு மாதம் ரூ.4000, 6 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் மார்ட்டினின் மகனுமான சார்லஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார்.
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில வளர்ச்சிக்காக தனது சொந்த நிதியில் இருந்து ₹100 கோடியைச் செலவிடுவேன் என்று தவெக தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் மார்ட்டின், உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சார்லஸ் மார்ட்டின் பல புதிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஆறு முக்கிய நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
நிதி உதவி
பெண்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்குவது பற்றி சார்லஸ் மார்ட்டின் பேசினார். அவர், "அரசு மாதம் தோறும் ₹2,000 தருவதாகச் சொன்னாலும், கடந்த மூன்று மாதங்களாக ஒரு பைசா கூட கொடுக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால், இந்தத் தொகையை மாதத்திற்கு ₹4,000 ஆகவும், ஒரு வருடத்திற்கு ₹50,000 ஆகவும் உயர்த்த நான் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
1 லட்சம்
இத்துடன், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ₹1 லட்சம் பணமும், 10 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று மார்ட்டின் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
கர்ப்பிணிகள் நலன்
கர்ப்பிணிகளின் நலன் குறித்தும் மார்ட்டின் பேசினார். "கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹35,000 நிதி உதவியும், குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு ஒரு சுகாதாரப் பெட்டியும் வழங்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார். ஆதரவற்ற மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆண்டுக்கு ₹60,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தினார். "தாய்மார்களுக்கான கல்வி நிதியை நாங்கள் உருவாக்குவோம். குழந்தைகளின் கல்வி மிக அவசியம். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ₹20,000 நிதி உதவி வழங்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
நிர்வாக பதவிகள்
அரசியல் மற்றும் நிர்வாகப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் திட்டங்களை மார்ட்டின் வெளியிட்டார். அவர், "புதுச்சேரியில் தற்போது ஒரே ஒரு பெண் பிரதிநிதிதான் இருக்கிறார். எங்கள் கட்சியில், பெண்களுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.
மார்ட்டின் மகன் சொன்னது என்ன
தான் அறிவித்த இந்தத் திட்டங்கள் சாத்தியமானவை என்று சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். "நான் கூறியுள்ள ஆறு திட்டங்களும் நிச்சயம் செயல்படுத்தக்கூடியவை. என் சகோதரி, மகள், மருமகளுக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ, அதையே மனதில் வைத்து இந்தத் திட்டங்களை உருவாக்கியுள்ளேன். மக்கள் எங்களை ஆட்சிக்குக் கொண்டு வருவார்கள், நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்றார்.
புதுவை மக்கள்தொகை
சார்லஸ் மார்ட்டின் அளித்த தகவலின்படி, புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகை 12.5 லட்சம். இதில் 50.9% பேர் பெண்கள். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ₹1,500 கோடி செலவாகும் என்று அவர் கணக்கு போட்டுள்ளார். மேலும் இந்த நிதியை தன்னால் திரட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications