புதுச்சேரியிலும் புகுந்தது கொரோனா.. மாஹேவில் மூதாட்டிக்கு பாதிப்பு.. தீவிர சிகிச்சை
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்தில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஹே மருத்துவமனையில் அந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவில் இதுவரை 120 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மூதாட்டி ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியம் கேரள மாநிலத்திற்கு நடுவே உள்ளது. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். புதுச்சேரியிலிருந்து மாஹே பகுதி சுமார் 600 கி.மீ தொலைவில் உள்ளது.

இதனிடையே மாஹே பள்ளூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் அபுதாபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த 3 நாட்களுக்கு முன் கோழிக்கோடு விமானம் நிலையம் மூலமாக மாஹேவுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால் அவர் மாஹே அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். பின்பு அவரது ரத்த மாதிரிகள், கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து மாஹே அரசு மருத்துவமனையில் அந்த மூதாட்டி தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மூதாட்டி வசித்து வந்த பகுதியில் வேறு யாருக்காவது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் மருத்துவ குழுக்களும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபர் இந்த மூதாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications