ஆளுநர்கள் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுகின்றனர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பகீர் புகார்
புதுச்சேரி : பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுவதாகவும், குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்காதது, நாட்டின் விடுதலை வரலாற்றை அழிக்கும் முயற்சி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் முத்தரசன், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு தேர்தலில் அறிவித்தது மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும், புதுச்சேரியில் துணை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே போட்டி அரசாங்கம் நடைபெற்று வருகிறது என்றார்.
புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வு, ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல எனக் கூறிய அவர், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தங்களின் வரம்புக்குள் செயல்படாமல், மத்தியில் ஆளும் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கான அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும் குழு வரலாறு தெரியாத பூஜ்ய குழு எனவும், தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்காதது, நாட்டின் விடுதலை வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றம் சாட்டினார். மேலும் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்காத பாஜகவை கண்டித்து மாநில தலைமை அலுவலகத்தில் நல்லகண்ணு தலைமையில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications