டாடி ஆறுமுகத்தின் மகன் அதிரடி கைது.. ஹோட்டல் பப்பில் என்ன நடந்தது.. புதுச்சேரியில் பரபரப்பு..!
டாடி ஆறுமுகம் மகன் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்
புதுச்சேரி: சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன், புதுச்சேரி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்..
பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் 'டாடி ஆறுமுகம்'.. வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற சேனலை நடத்தி வருகிறார். 46 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
இவர் 'டாடி ஆறுமுகம்' என்ற பெயரில் புதுச்சேரியில் 3 இடங்களில் ஹோட்டல்கள் வைத்து செயல்பட்டு வருகிறார்.

நண்பர்கள்
இந்நிலையில், புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஏகே டார்வின் ஹோட்டலுக்கு நேற்று இரவு 08.30 மணி அளவில் டாடி ஆறுமுகம் என்பவரின் மகன் கோபிநாத் வந்துள்ளார். அவருடன் அவரது நண்பர்களான ஜெயராம் மற்றும் தாமு ஆகிய 3 பேர் ஹோட்டலில் உள்ள PUB-ல் மது அருந்த வந்துள்ளனர். பிறகு, மது வாங்கி நண்பர்களும் அருந்த தொடங்கி உள்ளனர்.

மது விற்பனை
அவர்கள் உள்ளே வந்ததில் இருந்தே, அங்கிருக்கும் ஊழியர்களை கூப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது... ஊழியர்களும் பொறுமையாக இருந்துள்ளனர்.. இரவு 11 மணி ஆன பிறகு, அவர்கள் மீண்டும் மது வேண்டும் என்று கேட்டுள்ளனர்... அதற்கு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள்.

தகராறு
இதனால் கோபிநாத் ஆத்திரமடைந்துள்ளார்.. மது தராததாலும், ஏற்கனவே அதிகமாக மது அருந்தி இருந்ததாலும் ஊழியர்களிடம் தகாத வார்த்தையால் திட்டி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்... இதனை அதே ஹோட்டலில் வேலை பார்க்கும் ஜார்ஜ் சினாஸ் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.. இதனால் மேலும் டென்ஷன் அடைந்த அந்த கும்பல், பீர் பாட்டிலால் அவரை தாக்கி உள்ளனர்... இதனால் அங்கு உட்கார்ந்திருநத் மொத்த பேரும் அதிர்ச்சியானார்கள்..

புகார்
அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த தகராறை தடுக்க முற்பட்டுள்ளனர்.. அப்போதும் டாடி ஆறுமுகம் மகனை யாராலுமே அடக்க முடியவில்லை.. தொடர்ந ரகளையில் ஈடுபட்டதுடன், ஹோட்டலில் உள்ள அனைத்து பொருட்களையும் சூறையாடி உள்ளனர். இதுகுறித்து தகவல் முத்தியால்பேட்டை போலீசுக்கு தகவல் அளிக்கப்படவும் அவர்கள் விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட டாடி ஆறுமுகம் மகன் கோபி உட்பட 3 பேரையும் அழைத்து விசாரித்துள்ளனர்..

ரகளை
அவர்களோ, போலீசாரிடமே வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.. இதையடுத்து, அவர்களை ஸ்டேஷனுக்கு வரசொல்லிவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருமே ஸ்டேஷனுக்கு போகவில்லை.. இறுதியில் அந்த ஹோட்டல் ஊழியர் போலீசில் நடந்த சம்பவம் பற்றி புகார் தந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்..
Recommended Video

கைது
ஆனால் அதற்குள் மொத்த பேரும் எஸ்கேப் ஆகியிருந்தனர்.. இதையடுத்து இவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில், டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத், ஜெயராம், தாமு ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்... ஒரே நாளில் தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.. சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..












Click it and Unblock the Notifications