புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் அதிரடி ட்விஸ்ட்.. துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி அதிரடியாக நீக்கம்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி நீக்கம்… காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இன்னும் இரண்டு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது.

    இந்த சூழலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக நாராயணசாமி போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.

    தமிழக சட்டசபை தேர்தல்... ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு.. விரைவில் வரப்போகிறது.. செம்ம பரபரப்பு!தமிழக சட்டசபை தேர்தல்... ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு.. விரைவில் வரப்போகிறது.. செம்ம பரபரப்பு!

    நாராயணசாமிக்கு சிக்கல்

    நாராயணசாமிக்கு சிக்கல்

    இன்னொரு பக்கம் அமைச்சர் நமச்சிவாயம் உள்பட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து நாராயணசாமிக்கு எதிராக திரும்பி வருவதால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் நிலவுகிறது. புதுச்சேரியில் தற்போது குழப்பமான நிலை காணப்படுகிறது.

    தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

    தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக நீக்கப்ட்டார் என்பது குறித்து தகவல் இல்லை.

    2021ல் நீக்கம்

    2021ல் நீக்கம்

    கிரண்பேடி கடந்த 2016ம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். பதவிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிய நிலையில் இப்போது நீக்கப்பட்டுள்ளார். அதிகாரம் யாருககு அதிகம் என்பதில் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே மோதல் இருந்து வந்தது..

    இப்போது நிறைவேற்றம்

    இப்போது நிறைவேற்றம்

    பலமுறை நாராயணசாமி கிரண்பேடியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். நாராயணசாமியின் கோரிக்கை அவரது ஆட்சி முடியு போகும் நிலையில் தான் நிறைவேறி உள்ளது. புதிய துணை நிலை ஆளுநர் புதுச்சேரிக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Dr. Kiran Bedi removed as the Lieutenant Governor of Puducherry. Dr. Tamilisai Soundararajan, Governor of Telangana, given additional charge as Lieutenant Governor of Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X