புதுச்சேரியில் 24 ஆம் தேதிதான் தேர்தல் முடிவு வெளியாகும்.. தேர்தல் அதிகாரி தகவல்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் 24ஆம் தேதிதான் தேர்தல் முடிவு வெளியாகும் என அம்மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பயிற்சி முகாம் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Election result will be announce in Puducherry on May 24th

மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருண் தலைமையில் இந்த பயிற்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ஒவ்வொரு தொகுதியிலும் 5 வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான தொகுதி என மொத்தம் 155 வி.வி.பாட் எந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் 23-ந் தேதி எண்ணப்படும்.

ஒரு வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் சுமார் 25 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை வெளியிட முடியும்.

அதன்படி மறுநாள் 24ஆம் தேதி காலை சுமார் 8 அல்லது 9 மணிக்குத்தான் தேர்தல் முடிவு வெளியாகும். இருப்பினும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி மாலையில் அறிவிக்கப்படும். இவ்வாறு புதுச்சேரி தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான அருண்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+