புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி.. மாஹே முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டு மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய அரியாங்குப்பம் சொா்ணா நகரைச் சோ்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, திருவண்டாா்கோவிலைச் சோ்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவா்களுடன் தொடா்பில் இருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 4 பேரும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மேலும் இருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கேரள மாநிலம் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் வெளிநாடு சென்று வந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினாா்.

இதையடுத்து, அந்த மூதாட்டி வசித்த பகுதிகளில் உள்ள அனைத்துச் சாலைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டன. மக்கள் யாரும் வெளியில் செல்லவும், உள்ளே வரவும் முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, மளிகை, பால் உள்ளிட்டவை அங்கேயே சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே மாஹே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவா், கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில், மற்ற 6 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications