கோவில் சொத்து பற்றி பிரதமர் மோடி பேச.. அப்படியே பாஜக எம்.எல்.ஏக்கள் பக்கம் லைட்டை திருப்பிய திமுக!
புதுச்சேரி: கோவில்கள் மாநில அரசின் பிடியில் இருப்பதாகவும், கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி அண்மையில் பேசிய நிலையில், பாஜக எம்.எல்.ஏக்களை நோக்கி லைட்டை திருப்பியுள்ளது திமுக.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன. ஆனால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? என காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏக்கள் இருவர் கோவில் சொத்துகளை அபகரித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள் கோவில் சொத்தை அபகரித்ததை நாடே அறிந்த நிலையில், கோவில் சொத்துகளை அரசு நிர்வகிப்பதை பிரதமர் விமர்சிக்கலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டதாகவும், இது சம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நில அபகரிப்பைச் செய்தவர்கள் தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோர் என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜான் குமார். இவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார். இவர்கள் இருவரும் தான் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடக்கிறது.
இதனைச் சுட்டிக்காட்டி, "புதுச்சேரியில் கோயில் நிலத்தை ஆட்டையப்போட்ட 2 பாஜக எம்.எல்.ஏக்கள் குறித்து பிரதமர் பேசுவாரா?" என புதுச்சேரி மாநில திமுக ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி மாநில திமுகவினர் பலரும் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் பாஜகவினர் கோவில் சொத்துக்களை போலி பத்திரம் மூலம் தன்வசப் படுத்தியுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
மதத்தை கையில் எடுக்கும் மம்தா.. வளர்ச்சி முழக்கத்தோடு வரும் பாஜக.. என்ன சீன் மாறி போய் கிடக்கு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா












Click it and Unblock the Notifications