மீன்பிடி படகில் ஓட்டை.. கண் முன்பே கடலில் மூழ்கியது.. மீனவர்கள் அதிர்ச்சி!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி படகில் ஏற்பட்ட ஓட்டையால் மீனவர்கள் கண் முன்னே படகு மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி விசைப்படகில் 8 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அதிகாலை 4 மணிக்குத்தான் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்குவார்கள் என்றாலும், அந்த நேரத்தில் கடலின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் என்பதால் முதல்நாள் இரவு 9 மணிக்கே கடலுக்குள் சென்று நங்கூரமிட்டு படகை நிறுத்துவது இவர்களின் வழக்கம்.

அந்த வகையில் நேற்று வீராம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அசோக், சாமிநாதன், பிரசாந்த், பாஸ்கர், முத்துக்குமரன், முனியாண்டி, கந்தவேல் ஆகியோர் கடலுக்குள் சென்றனர்.
சின்ன முதலியார் சாவடி கடல் பகுதியில் படகை நிறுத்திவிட்டு உறங்கிய மீனவர்கள், அதிகாலை 4 மணிக்கு வலைகளை வீசத் தயாரான போது, படகின் எஞ்சின் பகுதியில் ஓட்டை ஏற்பட்டு கடல்நீர் உள்ளே வேகமாகப் புகுந்துகொண்டிருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாகப் படகு கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கிராமத்தில் இருந்த மற்ற மீனவர்களை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் அளித்தனர். விபரீதத்தை உணர்ந்த கிராமத்து மக்கள் உடனே இந்தியக் கடலோர காவல்படையை அணுகி உதவி கேட்டனர்.

இதனிடையே தகவலறிந்த சக மீனவர்கள் மீட்பு படகை எடுத்துக்கொண்டு செல்வதற்குள் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சின்ன முதலியார் சாவடி மீனவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சில நிமிடங்களில் அந்த மீன்பிடி விசைப்படகு முழுவதுமாகக் கடலில் மூழ்குவதைப் பார்த்த மீனவர்கள் பதறிப் போனார்கள். படகு போனாலும் பரவாயில்லை உயிர் தப்பியதே என தப்பித்த மீனவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications