கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
புதுச்சேரியில் 13 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

அதிகரிக்கும் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன. நாடு முழுவதும் 15,000-க்கு கீழ் இருந்த பாதிப்புகள் தற்போது 15,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.

தடுப்பூசி போடும் பணி தீவிரம்
இந்தியாவில் நிரந்தரமாக குடியிருக்கும் கொரோனாவை விரட்டியடிக்க கோவிஷில்டு, கோவாக்சின் என்ற தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

நாராயணசாமி தடுப்பூசி போட்டார்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 13 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரிமுன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி
புதுவையில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரசில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் பலர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications