ஃபனி புயல் எதிரொலி.. புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஃபனி புயல் நாளை ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. மேலும் மாலை திடீரென்று புதுச்சேரி முழுவதும் இருள் மேகங்கள் சூழ்ந்து, இரவு பலத்த காற்றுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. கனசெட்டிகுளம், திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை, ஏம்பலம், வில்லியனூர், கன்னியக்கோவில் உள்ளிட்ட புதுச்சேரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காற்று வேகமாக வீசியதால் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் ஒருசில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications