அதிகரிக்கும் கொரோனா: புதுவையில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆளுநர் தமிழிசை உத்தரவு!
புதுவை: கொரோனா அதிகரித்து வருவதால் புதுவையில் மார்ச் 22 முதல் மே 31-ம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைபோல் புதுவையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் புதுவையில் மார்ச் ச் 22 முதல் மே 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழிசை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31-ம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். ஆனால் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டும் இயங்கும். அடுத்து அதிகரிக்கும் கொரோனா தொற்றை பொறுத்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications