Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரி சிறுமியை.. தேடுவதற்கு போலீசுக்கு உதவுவது போல் நடித்த கருணாஸ்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமியை கொன்றுவிட்டு, குழந்தையை தேடுவதற்கு போலீசுக்கு உதவுவது போல் நடித்திருக்கிறார் கைதான கருணாஸ்.. மொத்தம் இரண்டு பேரை போலீசார் இந்த வழக்கில் கைது செய்துள்ளார். புதுச்சேரியை உலுக்கிய இந்த பயங்கரம் குறித்து பார்ப்போம்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் ஆட்டோ டிரைவரின் மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மார்ச் 2-ம் தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார்

How did Karunas who pretended to be looking for the Puducherry girl end up caught

இந்தநிலையில் மாணவியை அவளது பெற்றோர் தீவிரமாக தேடிய நிலையில் அக்கம் பக்கத்து வீடுகளில் உறவினர்கள் வீடுகளில் இல்லை.. இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசிடம் மாணவியின் பெற்றோர் மார்ச் 2ம் தேதியே புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினார்கள்.

போலீசார் இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடத் தொடங்கினார்கள். புதுச்சேரி சேலைநகர் முத்தையால்பேட்டை பகுதிகள் என புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவில் மார்ச் 2ம் தேதி பதிவான காட்சிகளை பார்த்தனர்.. இதில் ஒரே ஒரு ஒரு கேமராவில் சிறுமி மட்டுமே தனியாக அப்பகுதியில் நடந்து சென்ற காட்சி இருந்தது..

இதனிடையே மாணவிக்கு ஏதோ ஆகிவிட்டதாக பயந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று உடனடியாக குழந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரினார்கள். மேலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஒரே ஒரு கேமராவில் மட்டுமே மாணவியின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் வேறு எங்கும் சிறுமி சென்று இருக்க வாய்ப்பில்லை என்று கூறியதுடன், அந்த பகுதியில் தேட வேண்டும் என்று களம் இறங்கினார்கள்.

இதையடுத்து முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த நிலையில் மாயமான மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் பார்த்த போது, 9 வயது சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சுமார் 72 மணி நேரத்திற்கு பிறகு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

அப்போது ஆம்புலன்ஸை போகவிடாமல் தடுத்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதனிடையே சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில், ஒரு முதியவர் மற்றும் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக புதுச்சேரி நகரமே பதற்றமானது. இதனிடையே போராட்டக்காரர்களுடன் போலீசார் நீண்ட நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் சிறுமியை கொலை செய்த வழக்கில் 19 வயதாகும் கருணாஸ் என்ற இளைஞரும் 60 வயதாகும் விவேகானந்தன் என்ற முதியவரும் கைது செய்யப்பட்டனர். இதில் அந்த இளைஞன் கருணாஸ், போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடிவந்தாராம்.. ஆனால் போலீசாரின் விசாரணையில் கருணாஸ் சிக்கியிருக்கிறார். கருணாஸ் விவேகானந்தன் ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அதில் சிறுமி இறந்துபோனதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த புகாரில் இரண்டு பேர் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலை எப்படி நடந்தது? கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று கருணாஸ் மற்றும் விவேகானந்தனிடம் விசாரிக்கிறார்கள். விரைவில் முழு தகவலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+