தெலங்கானாவிலும் மக்களை சந்திக்கிறேன்.. யாரும் விரட்டவில்லை.. நாராயணசாமிக்கு தமிழிசை பதிலடி!
புதுச்சேரி: புதுச்சேரி போல் தெலங்கானா மாநிலத்திலும் மக்களை சந்தித்து வருவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். தெலுங்கானா மாநில அரசுடன் அவருக்கு மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், புதுச்சேரியில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் ஆளுநராக உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அரசு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்வது, பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது, அரசு திட்டங்கள் குறித்து அறிவிப்பது என முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

நாராயணசாமி கேள்வி
இதுகுறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொதுமக்களை சந்தித்து வரும் நிலையில், இங்கு சந்திப்பது போல தெலுங்கானாவிலும் மக்களை சந்திக்க தமிழிசைக்கு தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

தமிழிசை பதிலடி
இதற்கு பதிலளித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு வணக்கம். புதுச்சேரியிலும் தலைமைச் செயலரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். செயலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலகப் பணிகளை விடுத்து மக்களைச் சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். அதற்கான சுற்றறிக்கை அனுப்ப கேட்டிருக்கிறேன். அவரும் அதற்கு இசைவு தெரிவித்துக்ளார்.

அதிகாரத்தில் தலையிடவில்லை
அதேபோல, நானும் என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்பு கொள்ள முடியாதவர்கள், குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து மக்களை சந்திக்க மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது.

தெலங்கானாவில் மக்கள் சந்திப்பு
தெலுங்கானா மாநிலத்தில் மக்களை சந்திக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அதற்காக தெளிவுபடுத்துகிறேன். தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பெண்களையும் மாணவர்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன். நான் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே "பிரஜா தர்பார்" என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.

யாரும் விரட்டவில்லை
நீங்கள் கூறியதைப் போல அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு, தெலுங்கானா மாநிலத்தில் நான் மூன்றாம் ஆண்டில் செய்த அன்றாடப் பணிகள் பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது மேலான பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும் மூன்றாம் ஆண்டில் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் என்பதால் இதனை அனுப்பி வைக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications