ரங்கசாமியையே தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்.. புதுவை தேர்தல் 2021-ல் வெற்றிகளை குவித்த சுயேச்சைகள்
புதுவை: தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. அதே சமயம் புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமியையே தோல்வியடைய செய்யும் அளவுக்கு சுயேச்சை வேட்பாளர்கள் கவனம் ஈர்த்துள்ளனர். மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் புதுவையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
புதுவையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் அதே நாளில் அதாவது மே 04 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. புதுவையை பொறுத்தவரை யூனியன் பிரதேசமாகும். சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக புதுவை உள்ளது.

புதுவை சட்டமன்ற தேர்தல்
புதுவையில் தற்போது என்.ஆர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி பலத்துடன் அவர் முதல்வராக உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை.
இதனால் அரசியல் களம் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. புதுவையை பொறுத்தவரை அங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையே 9.44 லட்சம் தான். பரப்பளவிலும் சிறியது. மொத்தமே 30 தொகுதிகள்தான் உள்ளன. புதுவையில் இதுவரை நடந்த தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டவர்களும் கணிசமான வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கவனம் ஈர்த்த சுயேச்சை வேட்பாளர்கள்
அந்த வகையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம். குறிப்பாக முதல்வர் ரங்கசாமி போட்டியிட்ட யானம் தொகுதியில் அவரை சுயேச்சையாக போட்டியிட்ட கோலப்பள்ளி சீனிவாச அசோக் வீழ்த்தி கவனம் பெற்றார்.
சுயேச்சையாக போட்டியிட்டாலும் இவருக்கு காங்கிரஸ், திமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு கொடுத்தது. இந்த தொகுதியில் தோல்வியை சந்தித்தாலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
புதுவையில் வென்ற சுயேச்சைகள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்கு விவரம்:
* திருபுவணை தொகுதியில் பி.அங்கலனி என்ற வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிட்டு 10,597 வாக்குகள் பெற்று என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கோபிகா 8,238 வாக்குகள் பெற்றார்.
* உழவர் கரை: சுயேச்சையாக போட்டியிட்ட எம்.சிவங்கசர் 11,940 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஜி.பன்னீர் செல்வம் -11,121 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
திமுக இரண்டாம் இடம்
* முத்தியால் பேட்டை: ஜே பிரகாஷ்குமார் சுயேச்சையாக போட்டியிட்டு 8788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக சார்பில் வையாபுரி மணிகண்டன் 7,844 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்து இருந்தார்.
* உருளையன் பேட்டை: ஜி நேரு குப்புசாமி சுயேச்சையாக போட்டியிட்டு 9,580 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பாக போட்டியிட்ட எச்.கோபால் - 7,487- வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
காரைக்கால் மாவட்டம்
திருநள்ளாறு தொகுதியில் பி.ஆர் சிவா சுயேச்சையாக போட்டியிட்டு 9,551 - வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எச்.ராஜசேகரன் (பாஜக) 8416 வாக்குகள் (இரண்டாம் இடம்) பெற்று தோல்வி அடைந்தார்.
யானம் தொகுதி: கோலப்பள்ளி சீனிவாச அசோக், சுயேச்சையாக போட்டியிட்டு (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு) 17,131 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். ரங்கசாமி (என்.ஆர் காங்கிரஸ்) 16475 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications