புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் பந்த்.. கடைகள் அடைப்பு.. பஸ், ஆட்டோக்கள் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணி சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‛பந்த்’ போராட்டத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ், ஆட்டோக்கள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயங்குகிறது. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் புதுச்சேரியில் மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது.

பொதுவாக புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி மின்கட்டணம் உயர்த்தப்படும். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதனால் மின்கட்டண உயர்வு என்பது தள்ளிப்போனது. இந்நிலையில் தான் சமீபத்தில் மின்கட்டண உயர்வை அரசு அறிவித்தது.
அதன்படி வீட்டு உபயோகத்துக்கான ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 40 பைசா முதல் 75 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு என்பது ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்தது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வை திரும்ப பெறுவது மற்றும் மின்வாரியத்தை தனியார்மயமாக்க கூடாது மற்றும் டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் பந்த் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த பந்த் நடந்து வருகிறது.
அதன்படி இந்த பந்த் போராட்டத்தையொட்டி 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு பஸ்கள், கடைகள் இயங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கள் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் செப்.18 அன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளன. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.
மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளி, கல்லூரிக்கு வருவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது’’ என கூறியுள்ளார். ஆனாலும் கூட இன்று புதுச்சேரியில் வழக்கத்தை விட குறைந்த அளவில் மட்டுமே பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இருந்து சில பேருந்துகள் மட்டுமே புதுச்சேரி செல்கின்றன. இதனால் புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகள் மட்டுமின்றி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கிய கடையடைப்பு போராட்டம் என்பது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காததால் பணிக்கு செல்வோர், கல்லூரி, பள்ளிக்கு புறப்பட்ட 9 முதல் 12ம்வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காரைக்கால், ஏனம் உள்ளிட்ட புதுச்சேரியின் பிராந்தியத்திலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்த பந்த் போராட்டம் காரணமாக பெட்ரோல் பங்குகள், பார்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications